Published : Jul 09, 2022, 10:45 PM ISTUpdated : Jul 09, 2022, 10:46 PM IST
நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக துவங்கியுள்ளது அந்த வகையில் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட சூர்யா - ஜோதிகா புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாக அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனக்கென சொந்தமாக்கி கொண்டுள்ள நயன்தாரா, 6 வருடங்களுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.
25
இவர்களது திருமணம், முதலில் திருப்பதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், பின்னர் பயண தூரம் காரணமாக மஹாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
சிவப்பு நிற சேலையில், கழுத்து நிறைய வைர நகைகளுடன்... அழகு தேவதையாக இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். இவர்கள் திருமணம் நடந்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக துவங்கியுளளது.
ஏற்கனவே... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணிரத்னம், அட்லீ, ஷாருகான் போன்றோர் திருமணத்தில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கிய புகைப்படத்தை பகிர்ந்த நயன்தாரா தற்போது பிரபல நட்சத்திர ஜோடியின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில், பலரும் பார்த்து பொறாமை பட கூடிய நட்சத்திர தம்பதியான சூர்யா -ஜோதிகா இருவரும் மேட்சிங்... மேட்சிங்... உடையில் வந்து நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக இருவரும் பார்க்க கியூட் கப்பில் போல் உள்ளனர் என அவர்களது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.