பிரபல மாடலான ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே... தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் கஜோலுக்கு அசிஸ்டன்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி யாருக்கு கை கொடுத்ததோ இல்லையோ... ரைசாவின் திரையுலக வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
முதல் படமே வெற்றிபெறவே, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. எனவே மேலும் மேலும் தன்னுடைய அழகை மெருகேற்ற சில சிகிச்சைகளும் மேற்கொண்டார்.
தற்போது தன்னுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக, மாலத்தீவு சென்றுள்ள ரைசா... அங்கு நீச்சல் உடையில் எடுத்து கொண்ட விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வியக்க வைத்து வந்தார்.
அந்த வகையில் தற்போது, நீச்சல் குளத்தில் நின்றபடி... கருப்பு நிற ஷர்ட் அணிந்து சட்டை பட்டனை கழட்டி விட்டு இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.