விக்ரம், தர்பார், கைதி என 'போதை பொருளை' அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முக்கிய 10 தமிழ் படங்கள்.!

First Published Jul 9, 2022, 6:15 PM IST

தமிழ் சினிமாவில் திரில்லர், காமெடி, ஹாரர், என பல ஜெர்னர்களில் படம் எடுக்கப்பட்டு வந்தாலும்.. போதைப் பொருளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரில்லர் மற்றும் ஆக்சன் படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தமிழில் போதை பொருள் கதையை மையமாக வைத்து இதுவரை வெளியான முன்னணி நடிகர்களின் முக்கிய 10 படங்களின் பட்டியல் இதோ...
 

விக்ரம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் 'விக்ரம்'. கமல், விஜய் சேதுபதி ,பகத் பாஸில், சூர்யா, என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இந்த படம் போதை பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன் திரைப்படமாகும். இப்படம் விமர்சனம் ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் தற்போது வரை பட்டையை கிளப்பி வருகிறது.

கைதி:

விக்ரம் படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தியை வைத்து இயக்கியிருந்த படம் 'கைதி'.  இதுவும் போதை பொருளை கருகதையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. நரேன் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்த இந்த படத்தை, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

அயன்:

சூர்யாவின் அயன் திரைப்படம் தற்போது வரை பலரது ஃபேவரட் படங்களில் ஒன்று, காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன், என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும் பிரபு, விஜய் டிவி ஜெகன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். போதை பொருள் கடத்தல், வைரம், தங்கம் கடத்தல் போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அயம்' திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றிபெற்ற படமாக அமைந்தது.

மேலும் செய்திகள்: வாவ்... திருமணமான இரண்டு மாதத்திற்குள்... சூப்பர் சிங்கர் அஜய் - ஜெர்ஸி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!
 

சிங்கம்:

இயக்குனர் ஹரி சூர்யாவை வைத்து இதுவரை மூன்று பாகங்களாக இயக்கி கமெர்ஷியம் வெற்றி கொடுத்த திரைப்படம் 'சிங்கம்'. இந்த படத்தின் மூன்று சீரீஸ்களிலும் போதை பொருள் பற்றிய கரு மையமாக இருக்கும். குடும்ப ரசிகர்களால் தற்போது வரை ரசிக்கப்பட்டு வரும் சிங்கம் சீரீஸ் மூன்று பாகங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலிலும் கெத்து காட்டியது. 
 

இருமுகன்:

நடிகர் விக்ரம் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இருமுகன் திரைப்படமும் போதை பொருளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருந்தது. விக்ரம் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த நிலையில், நித்யா மேனன், கருணாகரன், நாசர், தம்பி ராமையா, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

kolamavu kokila

கோலமாவு கோகிலா:

பொதுவாக ஹீரோக்களே இதுபோன்ற போதை பொருள் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்கும் நிலையில், 'கோலமாவு கோகிலா' படத்தில் துணிந்து நடித்து கெத்து காட்டினார். தற்போது விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த இந்த படம் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக வசூல் சாஹானை செய்து வெற்றிபெற்றது. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், அன்பு தாசன், வடிவேல் பாலாஜி, ராஜேந்திரன், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தது.

மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் படத்தில் கமல்ஹாசனும் இருக்கிறாரா? ரகசியமாக வைத்திருக்கும் படக்குழு.. வெளியான ஆச்சர்ய தகவல்!
 

actor arya

மீகாமன்;

ஆர்யா நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மீகாமன்' போதை பொருளை கருகதையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். மேலும் அனுப்பமா குமார்,  சுதர்ஷன், சபர்ணா, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், கலவையான விமர்சனங்களை பெற்ற படமாக அமைந்தது.

மாஃபியா :

நடிகர் அருண் விஜய், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் மாஃபியா. 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிரடி ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இந்த படத்தின் கருவும் போதைப்பொருள் கதையை சுற்றியே நகரும்படி எடுக்கப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
 

சைத்தான்:

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'சைத்தான்' திரைப்படமும் போதை பொருளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அருந்ததி நாயர் மற்றும் அலிசா அப்துல்லா ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை இப்படம் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை எனலாம்.

மேலும் செய்திகள்: தமிழ் சினிமாவில் திரில்லர், காமெடி, ஹாரர், என பல ஜெர்னர்களில் படம் எடுக்கப்பட்டு வந்தாலும்.. போதைப் பொருளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரில்லர் மற்றும் ஆக்சன் படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தமிழில் போதை பொருள் கதையை மையமாக வைத்து இதுவரை வெளியான முன்னணி நடிகர்களின் முக்கிய 10 படங்களின் பட்டியல் இதோ...
 

தர்பார்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான 'தர்பார்' திரைப்படமும் போதை பொருளை அடிப்படையாகக் கொண்டே கதை அமைந்த திரைப்படம்.இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். குடும்பம் மற்றும் அதிரடி கதைக்களத்தை கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தது. இப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவலவையான விமர்சனங்களையும் பெற்ற படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

click me!