Published : Jul 09, 2022, 05:06 PM ISTUpdated : Jul 09, 2022, 05:08 PM IST
ரஜினிகாந்த் ஒரு பரிசு பெட்டகத்தை நயன்தாராவின் கையில் வைத்து வாழ்த்து கூறுவதும், மணமகனுக்கு வாழ்த்து கூறுவதுமான புகைப்படங்களும், ஷாருக்கான் நயன்தாராவை கட்டியணைத்து வாழ்த்து சொல்லும் புகைப்படங்களும் அடங்கியுள்ளன. இவை தற்போது வைரலாகி வருகிறது.
முன்னணி நாயகியான லேடி சூப்பர் ஸ்டார் தமிழ், கன்னடம், தெலுங்கு என பன்மொழிகளில் பான் இந்திய நாயகியாக ஜொலித்து வருகிறார். அவருக்கு ரசிகர் பட்டாளமும் ஏராளம். இவர் சமீபத்தில் தனது காதலன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வெற்றி கண்டது.
25
Nayanthara Vignesh shivan wedding
ராஜா வீட்டு கல்யாணம் போல பிரமிக்கும் வகையில் நடைபெற்ற இதில் மணமகள் நயன்தாரா சிகப்பு வண்ண புடவை வெஸ்டர்ன் ஸ்டைல் நகைகள் அணிந்து தேவதையாக காட்சியளித்தார். பின்னர் தாலி கட்டிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அப்போது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
35
Nayanthara Vignesh shivan wedding
இவர்களது திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்தினம், ஷாருக்கான், அட்லி என நட்சத்திரங்கள் பலரும் இவர்களது திருமணத்தில் ஜொலித்திருந்தனர்.
இந்நிலையில் திருமணம் ஆகி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைவதை அடுத்து திருமண புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன. அதில் ரஜினிகாந்த் ஒரு பரிசு பெட்டகத்தை நயன்தாராவின் கையில் வைத்து வாழ்த்து கூறுவதும், மணமகனுக்கு வாழ்த்து கூறுவதுமான புகைப்படங்களும், ஷாருக்கான் நயன்தாராவை கட்டியணைத்து வாழ்த்து சொல்லும் புகைப்படங்களும் அடங்கியுள்ளன, இவை தற்போது வைரலாகி வருகிறது.
55
Nayanthara Vignesh shivan wedding
முன்னதாக இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்ற புகைப்படங்களை அவ்வப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டு வந்தார். இந்த காதல் தம்பதியின் புகைப்படங்கள் வாழ்த்து மழையால் நனைத்திருந்தன.