பொன்னியின் செல்வன் படத்தில் கமல்ஹாசனும் இருக்கிறாரா? ரகசியமாக வைத்திருக்கும் படக்குழு.. வெளியான ஆச்சர்ய தகவல்!

First Published | Jul 9, 2022, 3:55 PM IST

இயக்குனர் மணிரத்தினம் மிக பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ள, 'பொன்னியின் செல்வன்' படத்தில் கமல்ஹாசனும் இணைந்துள்ளதாக ஆச்சர்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், இந்த படத்தை இயக்கியுள்ளது மட்டும் இன்றி லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ளார் மணிரத்தினம்.

 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்: சாய்பல்லவிக்கு வந்த சோதனை... நீதிமன்ற தீர்ப்பால் செம்ம அப்செட்!!
 

Tap to resize

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக, நேற்று இப்படத்தின் டீசர் சென்னை டிரேட் சென்டரில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. புல்லரிக்கவைக்கும் பிரமாண்டமாய் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரை பார்த்தே... பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: அனிரூத்தின் அக்காவா இது? சும்மா சினிமா ஹீரோயின் போல் இருக்காங்களே..! பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!!
 

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ்  உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மணிரத்னம் படமாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

இந்த படத்தில், தற்போது உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், 'பொன்னியின் செல்வன்' படத்தில் உள்ள முக்கிய கேரக்டருக்கு கமல் குரல் கொடுத்துள்ளார் என்றும், அவர் யாருக்கு குரல் கொடுத்துள்ளார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

மேலும் செய்திகள்: வாவ்... திருமணமான இரண்டு மாதத்திற்குள்... சூப்பர் சிங்கர் அஜய் - ஜெர்ஸி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!
 

ஏற்கனவே கமல்ஹாசன் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை தயாரிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முயன்றார். ஆனால் அவரது முயற்சி வெற்றியடையவில்லை. எனினும் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்காவிட்டாலும், ஒரு அங்கமாக மாறியுள்ளது கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் அமைந்துள்ளது.

Latest Videos

click me!