விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் முதல், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்துக்குமே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அந்த வகையில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று, சூப்பர் சிங்கர். ஜூனியர் - சீனியர் என மாறி மாறி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் வரை ரசிகர்களாக உள்ளனர்.
அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. அச்சு அசல் உதித் நாராயணன் போலவே குரல் வளம் கொண்ட இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
அதாவது, அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெர்ஸி இருவரும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளனர். இதை தொடர்ந்து இவரது ரசிகர்கள் இந்த ஜோடிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.