ஒரு வரியில் ரசிகர்களை ஈர்த்த படங்கள்..5 சூப்பர் ஹிட் மூவிஸ் லிஸ்ட் !

First Published Jul 9, 2022, 2:08 PM IST

ஒரு வரி கதையை வைத்து முழு படமும் ஹிட் ஆகிய சமீபத்திய ஐந்து படங்கள் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்..

kaithi movie

கார்த்தியின் கைதி :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் தான் கைதி. ரூ. 25 கோடியில் உருவான இந்த படம் முழுவதும் இரவில் தான் படமாக்கப்பட்டிருக்கும். டார்க் திரில்லராக என்று கூறப்படும் இந்த படத்தின்மொத்த கதையும்  "போதைப் பொருள் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் காவலர்களை காப்பாற்றும் முயற்சியாகவே இருக்கும். இதில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கால். படத்தின் பெரும்பாலான பகுதிகள் நாயகனும், போலீஸ் அதிகாரியும், லாரிக்கு உரிமையாளரும் ஆகிய மூவரும் லாரியில் பயணிப்பார்கள், லாரியின் பின்புறம் போதையால் மயக்கமுற்ற காவலர்கள் கிடத்தப்பட்டு இருப்பார்கள். ரசிகர்களின் பேராதரவை பெற்று பாக்ஸ் ஆஃபீஸில் சுமார் 150 கோடியை வசூல் சாதனையாக பெற்றதுகைதி.

valimai movie

அஜித்குமாரின் வலிமை :

நேர்கொண்ட பார்வையை அடுத்து இரண்டாவது முறையாக வினோத், போனி கபூருடன் அஜித் குமார் இணைந்த படம் தான் வலிமை. இந்த படத்தில் அஜித் போலீஸ்காரராக நடித்திருப்பார். பணத்தாசை காட்டி  இளைஞர்களை போதைப்பொருள் கடத்த வைக்கும் கும்பலை தடுப்பதே  இந்த படத்தின் மொத்த கதையும் ஆகும். இதில் அஜித் எவ்வாறு அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறார்,  போதை பொருள் கும்பலை எப்படி ஒடுக்குகிறாய் என்பதுதான் இதன் கதை. போதுமான வரவேற்பு கிடைக்காவிட்டாலும் வசூலில் ரீதியில் நல்ல லாபத்தையும் இந்த படம் பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...பிரேமம் நிவின் பாலியா ? ..குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம ஆகிட்டார்!

Beast movie

விஜயின் பீஸ்ட் :

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  உருவாக்கிய படம் தான் பீஸ்ட். இந்த படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். சில காரணங்களுக்காக ராணுவத்திலிருந்து விலகி செக்யூரிட்டி வேலைக்கு செல்லும் விஜய், பிரபல மாலில்  மாட்டிக்கொள்ளும் மக்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதே படத்தின் மொத்த கதையமாக இருக்கும். விமர்சன ரீதியில் போதுமான வரவேற்பு பெறவில்லை என்றாலும் நல்ல வசூலையே பெற்றிருந்தது. ரூ.150 கோடியில் உருவான இந்த படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

மேலும் செய்திகளுக்கு...அரசர்கள் புடை சூழ அரங்கேறிய பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்ச்சி ! கலர்புல் போட்டோஸ் இதோ..

vikram movie

கமலின் விக்ரம் :

முந்தைய விக்ரம் தொடர்ச்சி என கூறப்பட்ட விக்ரம் படத்தில் உலகநாயகன் கமலஹாசன் வயதான தோற்றத்தில் நடித்திருப்பார். அதாவது ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இதில் ஃபகத் பாஸில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்திலும் வந்திருந்தார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படமும் போதைப் பொருளை கடத்தும் கும்பலை ஒடுக்குவதற்கான படமாகவே இருந்தது. படம் முழுக்க ஆக்ஷன், கலவரம், ரத்த கலரி என தெறிக்கவிட்ட விக்ரம் ரூ.442 கோடிகளை வசூலாக பெற்று மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...பிரேமம் நிவின் பாலியா ? ..குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம ஆகிட்டார்!

nenjuku needhi

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி :

 உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆனா பின்னர் முதல் முறையாக வெளியான படம் நெஞ்சுக்கு நீதி. அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை பற்றிய படம். இது தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண் குழந்தைகள் படும் பாட்டை தோலுரித்து காட்டி இருந்தது. படத்தின் மொத்த கதையும் சாதி சார்ந்த குற்றங்கள் குறித்தே உள்ளது.

click me!