தமிழ் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, வட இந்தியா உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான். அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை, கிரீஷ் கங்காதரனின் பிரம்மிப்பூட்டும் ஒளிப்பதிவு என டெக்னிக்கல் ரீதியாகவும் இப்படம் சிறந்து விளங்கியது.பல வருடங்களுக்கு பிறகு கமலின் திரைப்படம் வெளியானலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று, இதுவரை தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது விக்ரம்.