Myna Nandhini
மதுரை பெண்ணான நந்தினி படிக்கும் காலத்திலேயே ஆக்டிங் மீது அன்பு கொண்டிருந்தார். அவர் கல்லூரி காலங்களில் மேடையில் அடிக்கடி தோன்றி வந்தார். பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
Myna Nandhini
படத்திலும் மைனா நந்தினி நடித்திருந்தார். சின்னத்திரை பக்கம் வந்த அவர் பிரியா பவானி சங்கர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நடித்த இவர் மீனாட்சியின் தோழி மைனாவாக நடித்தார். அதன்பிறகு நந்தினி மைனா நந்தினி ஆனார்.
myna nandhini
மீண்டும் துணி வேடங்களில் நடித்த மைனா நந்தினி சிவகார்த்திகேயன் விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரியன் மனைவியாக நடித்திருந்தார். மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 - லும் மைனா நந்தினி நடித்திருந்தார்.
myna nandhini
தற்போது விஜய் டிவியில் ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் மைனா நந்தினி யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப படங்களை பகிர்ந்து வரும் மைனா நந்தினி தற்போது ஷேர் செய்துள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...பிரேமம் நிவின் பாலியா ? ..குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம ஆகிட்டார்!
myna nandhini
அதாவது இவர் தங்களுக்கு என ஒரு புது காரை வாங்கி உள்ளார். கியா நிறுவனத்தின் கேரன்ஸ் மாடல் காரைத்தான் இவர் வாங்கியுள்ளார். அந்த காரின் விலை ரூ. 11 லட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...புதிய ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதியின் மாமனிதன்..எப்ப ரிலீஸ் தெரியுமா?