பலமுறை முரட்டுத்தனமாக நான் அவளை தாக்கியும் என்னை விட்டுச் செல்ல வேண்டும் என அவள் ஒருமுறை கூட எண்ணியதில்லை அந்த அளவிற்கு இருவருக்குள்ளும் புரிதல் இருந்தது என எஸ்.ஏ.சந்திரசேகர் ஓப்பனாக பேசி உள்ளார்.
பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் 1978 ஆம் ஆண்டு "அவள் ஒரு பச்சைக் குழந்தை" என்னும் படத்தின் மூலம் திரையுலக்கிற்குள் அடி எடுத்து வைத்தார். இவரது இரண்டாவது படமான " சட்டம் ஒரு இருட்டறை மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த இவர் வெற்றி படத்தில் விஜய்யை சிறப்பு தோற்றத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
26
vijay parents
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பொன்மொழிப் படங்களை இயக்கும் திறன் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும், திரை வசனம் எழுத கூடியவராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மனைவியும் விஜய், வித்யா என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். இதில் வித்யா சிறு வயதிலேயே இறந்து விட்டார்.
இறுதியாக மாநாடு படத்தில் முதலமைச்சராக நடித்திருந்த சந்திரசேகர் தற்போது "நான் கடவுள் இல்லை" எனும் படத்தை இயக்குகிறார். அவ்வப்போது தனது கடந்த காலம் குறித்த ஞாபகங்களை வீடியோவாக வெளியிட்டு வைரலாகி வரும் இயக்குனர். சமீபத்தில் சென்னை டி நகர் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும் காட்சிகளை பகிர்ந்திருந்தார்.
36
vijay parents
தற்போது தனது 80 ஆவது மணிவிழாவை கொண்டாடுகிறார் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர். முன்னதாக தனது 80 வது பிறந்த நாளை மனைவியுடன் மட்டும் எஸ்ஏ சேகர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. அவரது மகனோ, மருமகளோ, பேரக் குழந்தைகளோ இல்லாமல் இருவர் மட்டும் தனியாக அந்த புகைப்படத்தில் காணப்பட்டனர்.
தொடர்ந்து மணிவிழாவிலும் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபனா தம்பதியினர் மட்டுமே இருந்தனர். அவர்களது குடும்பம் கலந்து கொள்ளவில்லை. ஒரே மகனான விஜய் தனது பெற்றோர்களின் மணிவிழாவில் நடத்தாதது குறித்து நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பு வருகின்றனர். ஆனால் தந்தை சந்திரசேகரோ தனது மகன் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் தனது மணிவிழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என சாக்குப் போக்கு கூறியுள்ளார்.
56
vijay parents
இந்நிலையில் தனது மனைவி குறித்து இவர் பேசிய பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் 5 வருடங்களாக காதலித்து வந்த இவர்களது திருமணத்தை சிவாஜி கணேசனும் அவரது மனைவியும் நடத்தி வைத்துள்ளனர் என்றும், விஜய், வித்யா பிறந்த பிறகும் ஷோபனா தனக்கு மனைவியாகவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் பேசியவர், தனக்கு மனைவி இல்லை என்றால் வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம் இருவரும் இன்று வரை காதலர்களாக தான் உள்ளோம் என்றும், பலமுறை முரட்டுத்தனமாக நான் அவளை தாக்கியும் என்னை விட்டுச் செல்ல வேண்டும் என அவள் ஒருமுறை கூட எண்ணியதில்லை அந்த அளவிற்கு இருவருக்குள்ளும் புரிதல் இருந்தது என ஓப்பனாக பேசி உள்ளார். மனைவி ஷோபனா குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரின் நெகிழ்ச்சி பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.