நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமான நிலையில், அவர் இறந்த பின்னர் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் இதுவாகும். அவரது பிறந்தநாளன்று அன்னதானம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சாப்பாட்டுக்காக விஜயகாந்த் ரயிலையே நிறுத்திய சம்பவம் பற்றி தற்போது பார்க்கலாம்.
24
Captain Vijayakanth
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பல்வேறு நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இதனிடையே ஒரு முறை சாரல் என்கிற கலை நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் நடத்தினார் கேப்டன். அதில் ஏராளமான திரையுலக பிரபலங்களை திரட்டி வந்து ஒரே ஆளாக அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் விஜயகாந்த். அந்த நிகழ்ச்சி முடிந்து இரவு 11.30 மணிக்கு பிரபலங்கள் அனைவரும் மதுரையில் இருந்து ரயில் ஏறினர்.
சினிமா பிரபலங்களுக்காகவே சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை அழைத்து சென்றிருந்தார் கேப்டன். அன்று இரவு ரயில் ஏறிய பின்னர் தான் யாரும் சாப்பிடவில்லை என்கிற தகவல் விஜயகாந்த் காதுக்கு சென்றிருக்கிறது. உடனே கொடை ரோடு அருகே ரயில் சென்றபோது பாதியில் ரயிலை நிறுத்த சொன்ன கேப்டன் விஜயகாந்த், உடனடியாக இறங்கி சென்று அங்கு அருகில் இருந்த பரோட்டா கடையில் சாப்பாடு வாங்க சென்றாராம்.
44
Vijayakanth unknown facts
அங்கு சென்று உணவை வாங்கி வந்து நடிகர், நடிகைகளுக்கு கொடுத்து அவர்களை வயிறார சாப்பிட வைத்து பின்னர் தான் ரயிலை எடுக்க சொன்னாராம் கேப்டன். தன்னிடம் யாரும் பசி என வந்துவிட்டால் அவர்களுக்கு சாப்பாடு போட்டு பழகியவர் கேப்டன். அவர் சாப்பாட்டுக்காக ரயிலையே நிறுத்திய சம்பவம் திரைப்பிரபலங்கள் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அவரால் மட்டுமே இது சாத்தியம் என்றும் நடிகர்களே சிலாகித்து கூறுவார்கள்.