மேகாவின் வருங்கால கணவர் சாய் விஷ்ணு வேறுயாருமில்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதி, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் தான் இந்த சாய் விஷ்ணு. மேகா ஆகாஷுக்கு அவரை 9 வருடங்களாக தெரியுமாம். கடந்த ஆறு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகிறார்களாம். சாய் விஷ்ணு தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளாராம். அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் படித்த இவர், காலா, கபாலி போன்ற படங்களில் இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.