Vijay
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். 90ஸ் நாயகனாக போல விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு. சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பூ ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
varisu
இதில் இரண்டு அண்ணங்களுக்கு தம்பியாக குடும்ப செண்டிமெண்ட் படத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. படம் வரும் பொங்கல் அன்று துணிவு படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...மாஸாக என்ட்ரி கொடுக்கும் அஜித்... உற்சாகம் அடைந்த ரசிகர்கள் !
Varisu
விஜய் தமன் கூட்டணியில் இதுவே முதல் முறையாகும் அதோடு நடன இயக்குனர் ஜானி விஜய்யின் தெறி நடனத்தை காண காத்திருங்கள் என சமீபத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார். இதனால் முதல் சிங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
அதோடு சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் பட விழாவில் இந்த வாரத்தில் முதல் சிங்கிள் வெளியாகும் என இசை அமைப்பாளர் தமன் கூறியிருந்தார். அதை தொடர்ந்து விஜயின் மகன் சஞ்சய் ட்வீட்டர் பக்கத்தில் இந்த வாரம் வாரிசு அப்டேட் என்று கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று வாரிசு அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.