இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இந்த பிரபலமா? வெளியான ஷாக்கிங் தகவல்..!

Published : Oct 21, 2022, 11:31 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ள முதல் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
14
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இந்த பிரபலமா? வெளியான ஷாக்கிங் தகவல்..!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக சண்டை - சச்சரவுகளுடன் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. முதல் வாரத்திலேயே சில பிரச்சனைகள் தலை தூக்கினாலும், இரண்டாவது வாரத்தில் செருப்பை கழட்டி அடிக்க செல்லும் அளவிற்கு பிரச்சனைகள் பெரிதாகியுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், முதல் வாரத்தில் மட்டும் சுமார் 15 போட்டியாளர்களுக்கு மேல் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர்.
 

24

எனவே, இந்த வாரம்... பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள அந்த முதல் போட்டியாளர் யாராக இருப்பர் என்பதை அறிந்து கொள்வதில், அனைவருக்கும் ஆர்வம் உள்ளது. முதல் வாரமே ஜிபி முத்துவுடன் சண்டை போட்டு, ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான, தனலக்ஷ்மியாக இருக்குமே என்கிற கேள்வி எழுந்து வந்தாலும், இந்த வாரம் முழுவதும், தேவை இல்லாமல் அவர் எந்த பிரச்சனைக்குள்ளும் அவர் ஆஜராக வில்லை. எனவே அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: உறுதி..! 23 வயது பெண்ணுடன் 56 வயதில் திருமணமா? நடிகர் பப்லு பரபரப்பு விளக்கம்..!
 

34

மேலும், நிறைய போட்டியாளர்கள் உள்ளதால்... யார் வெளியே செல்வர் என்று யூகிக்க முடியாத நிலையும் உள்ளது. எனினும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி, விக்ரமன் வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
 

44

எனினும் இதில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? நெட்டிசன்களின் கணிப்பு படி இவர் தான் வெளியேறுவாரா என்பது... நாளைய தினம் தெரிய வரும். அதுவரை கார்த்திருப்போம்.

மேலும் செய்திகள்: சல்லடை போன்ற சேலையில்... கட்டழகை காட்டி அக்கா ஜான்விக்கே டஃப் கொடுக்கும் குஷி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

Read more Photos on
click me!

Recommended Stories