தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, பின்னர் தமிழில் ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்தார். இவர் கதாநாயகியாக இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து இவரை படங்களில் புக் பண்ண இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர்.
பின்னர் மெல்ல மெல்ல பாலிவுட் பட வாய்ப்பை கைப்பற்றிய பின்னர், தொடர்ந்து ஹிந்தி படங்கள் நடிப்பதில் தான் கவனம் செலுத்தினார். அப்போது, இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருக்கும் இடையே காதல் உருவானது. இந்த காதல் திருமணத்திலும் முடிந்தது.
குடும்ப உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி, பாத் டப்பில் குழுதுகொண்டிருக்கும் போது திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறப்பட்டது. இவரது இழப்பில் இருந்து மீண்டுள்ள இவரது குடும்பத்தினர்.
அக்காவுக்கே தற்போது டஃப் கொடுக்கும் விதத்தில், அவரது தங்கை குஷி கபூர் கவர்ச்சி சிலை போல் சல்லடை போன்ற சேலையிலும், விதவிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.