தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் 2ஆவது நாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ். தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணான கண்ணே' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 56 வயதிலும் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் வலம் வரும் இவர். தனக்கு தொழில் ரீதியாக அறிமுகமான மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவியது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பப்லு, இது குறித்தும் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த திருமணம் குறித்து பேசி உள்ளார். பலரும் தன்னிடம் நீங்கள் மலேசியாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்களா என கேட்டனர். நான் அப்படியே கேட்டு மெசேஜ் செய்தேன்... பின்னர் அந்த தகவல் மிகவும் வைரலாக பரவி விட்டது. காரணம் இன்றைய காலகட்டம் அது போல் உள்ளது. ஏதாவது ஒரு சின்ன தகவல் என்றாலும், அது நான்கு சுவற்றிற்குள் இருப்பது கிடையாது. உலகம் முழுவதும் வைரல் ஆகிவிடுகிறது. எங்கெங்கிருந்தோ எனக்கு போன் செய்து கேட்டார்கள் திருமணம் ஆகி விட்டதா என்று!
மேலும் செய்திகள்: திடீர் என 500 ரசிகர்களை சந்தித்த சூர்யா..! வைரலாகும் வீடியோ..!
இதற்கு நான்... திருமணம் பண்ணப் போகிறேன்... ஆனால் இப்போதைக்கு இல்லை. இன்னும் அது குறித்து நான் யோசிக்கவும் இல்லை என கூறினேன். இதே போல் எத்தனை பேருக்கு நான் விளக்கம் சொல்வது என தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில், என்னுடைய தனிப்பட்ட பிரைவேட் வாழ்க்கையை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறன்.
காரணம் சினிமாக்காரர்களை பொருத்தவரை, ஒரு தவறான பழக்கம் உள்ளது. புருஷன் - பொண்டாட்டி சண்டை போட்டுக்கிட்டா கூட மீடியா முன்னாடி வந்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். புருஷன் வந்து பொண்டாட்டியை பற்றி தவறாக பேசுகிறான்... பொண்டாட்டி புருஷனை பற்றி தவறாக பேசுகிறார்.. இதனால் எல்லா சினிமா காரர்களும் இப்படித்தான் என நினைத்து விடுகிறார்கள். ஆனால் நான் அப்படி இருக்க வேண்டும் என நினைத்ததில்லை! என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை அது தனியாக தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் இதற்காக நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது முடியாமல் போகிறது.
மேலும் செய்திகள்:சல்லடை போன்ற சேலையில்... கட்டழகை காட்டி அக்கா ஜான்விக்கே டஃப் கொடுக்கும் குஷி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
என்னை பொறுத்தவரையில் நான் எது செய்தாலும் அதனை வெளிப்படையாக செய்பவன். உங்கள் அனைவருக்கும் தெரிந்து, உங்களின் ஆசிர்வாதத்தோடு செய்வேன். திருட்டுத்தனமாக எதையும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் பப்லு திருமணம் செய்து கொள்ள உள்ளது உறுதி... என்றாலும் இன்னும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.