Image: Rakul Preet SinghInstagram
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங். கன்னட திரைப்படமான கில்லி மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானர்.
Image: Rakul Preet SinghInstagram
இதன் பிறகு என்னமோ ஏதோ படத்தில் நடித்த இவர் பின்னர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். அங்கு கிட்டத்தட்ட 12 படங்களுக்கு மேல் தோன்றி இருந்தார் ரகுல் ப்ரீத் சிங்.
இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருந்தது. இதில் எஸ் ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று , தேவ் உள்ளிட்ட படங்களில் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்திருந்த ரகுல் பிரீத் சிங் இதைத்தொடர்ந்து என் ஜி கே படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும் நடித்தார்.
இவருக்கு பாலிவுட், தெலுங்கில் தான் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. பல வருடங்களுக்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான், உலக நாயகனின் இந்தியன் 2 மற்றும் 31 அக்டோபர் பெண்கள் இரவு என்னும் மூன்று படங்களில் மட்டும் ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல் பிரீத் சிங்.
பாலிவுட் நாயகியாக ஜொலித்துவரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இதற்கிடையே சமூக ஊடகத்தில் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் முழு முதுகு தெரியுமாறு உடையணிந்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் ரகுல் பிரீத்.