சீரியலில் மட்டுமல்ல ரியலிலும் ராஜா ராணி 2 குடும்பத்தில் திருமணம்.. நடிகருக்கும் குவியும் வாழ்த்து

First Published | Sep 5, 2022, 7:29 PM IST

சரவணனின் மூத்த தம்பியாக நடித்து வரும் பாலாஜி தியாகராஜனுக்கு இன்று காலை திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.

vijay tv raja rani 2 serial actor balaji thiyagarajan dayalan marriage photos

விஜய் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி. ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடியாக நடித்திருந்த ராஜா ராணி இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதாகும். இதில் ஆல்யா படிக்காத பெண்ணாக வந்து பணக்கார வீட்டு இளைஞனை திருமணம் செய்து கொள்வார். பின்னர் அந்த வீட்டிற்கு ஏற்றபடி அவரை எவ்வாறு உருமாற்றிக் கொள்கிறார் என்பதே சீரியல் மைய கருத்தாக இருந்தது.

vijay tv raja rani 2 serial actor balaji thiyagarajan dayalan marriage photos

2017 முதல் 2019 வரை கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை தாண்டி இந்த தொடர் சென்று கொண்டிருந்தது இதை அடுத்து தற்போது ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய தொடரில் படிக்காத நாயகியாக வந்த நாயகி இந்த தொடரில் படித்த பெண்ணாகவும் போலீசாக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் பெண்ணாகவும் நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...ரஜினியை திட்டியதால் ரயிலை வழிமறித்த ரசிகர்கள்...மன்னிப்பு கேட்ட வடிவுக்கரசி

Tap to resize

vijay tv raja rani 2 serial actor balaji thiyagarajan dayalan marriage photos

பின்னர் இரண்டாவது பிரசவத்திற்காக விடுமுறைக்கு சென்ற ஆல்யா மானசா இந்த சீரியலில் இருந்து மொத்தமாக விலகி விட்டார். இதை அடுத்து இவருக்கு பதிலாக ரியா என்பவர் சந்தியாவாக நடித்த வருகிறார். இதில் நாயகன் சரவணனாக பிரபல சீரியல் நடிகர் சித்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு... அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் செல்வன் அப்டேட்டுகள்...ஜடாமுடியுடன் பிரபல நடிகர்

இவர்களுடன் சரவணனின் தம்பியாக செந்திலாக பாலாஜி தியாகராஜன் தயாளன் , அம்மா ரோலில் பிரவீனா, ஆதியாக விஜே பிரதோஷ்,  பார்வதியாக வைஷ்ணவி, மயில் ரோலில் சுஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.   இந்த சீரியலில் செந்தில் மற்றும் அர்ச்சனாவின் ஜோடி மிகப் பிரபலம் துணிக்கடை வைத்திருப்பவராக வரும் இவரும் இவரது மனைவியும் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம்.

vijay tv raja rani 2 serial actor balaji thiyagarajan dayalan marriage photos

தற்போது ராஜா ராணி சீரியலில் சரவணனின் இரண்டாவது தம்பியான ஆதி தான் காதலித்த பெண்ணை கர்ப்பம் ஆக்கிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். இந்த உண்மையை அறிந்த சரவணன்  மற்றும் குடும்பத்தினர்  ஆதிக்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கின்றனர். இதை சுற்றி தான் சமீபத்திய எபிசோடுகள் நகர்ந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... குட்டை டவுசர்... சிம்மிஸுடன் பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் ஜான்வி கபூர்

vijay tv raja rani 2 serial actor balaji thiyagarajan dayalan marriage photos

இந்நிலையில் சரவணனின் மூத்த தம்பியாக நடித்து வரும் பாலாஜி தியாகராஜனுக்கு இன்று காலை திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்களுக்கு ராஜா ராணி 2 குழுவினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜி  சீரியலில் மட்டுமல்லாமல் youtube வெப் சீரியல் குறும்படம் என பிசியாக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!