அதிக மேக்கப் மற்றும் துளியும் கவர்ச்சி காட்டாமல், தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளின் ஒருவர் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் அறிமுகமான முதல் படமான 'பிரேமம்' படத்தின் மூலமே இவருக்கு, மலையாள திரையுலகை தாண்டி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி ரசிகர்களும் அதிகரித்து விட்டனர்.
அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கார்கி'படம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆசிரியையாக நடித்திருந்த சாய் பல்லவி, சூழ்நிலை காரணமாக தன்னுடைய தந்தை பாலியல் வழக்கில் மாட்டிக்கொள்ள, அவரை அதிலிருந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எப்படி வெளியே கொண்டு வருகிறார் என்பதை... சினிமா தனம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை குவித்தார்.
இவர் கோவிலுக்கு வந்த செய்தி அங்கு தீயாக பரவிய நிலையில், ஏராளமான ரசிகர்கள் கோவிலில் கூடினர். இதனால் அங்கு சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சாய் பல்லவி தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவர்கள் அனைவருடனும் மிகவும் பொறுமையாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.