விஜய் டிவி சீரியலில், ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரில், செம்பா என்கிற வேலைக்கார பெண் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஆல்யா மானசா. இந்த சீரியலில் இவருக்கு ரீல் ஜோடியாக நடித்த சஞ்சீவ் - ஆல்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதும் ஆல்யா கர்ப்பமானதால் சிறிது காலம் சீரியலில் இருந்து விலகியே இருந்தார்.
கடந்த மார்ச் மாதம் ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில், மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் பேசிய போது, ஆல்யா தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடிய இவர், தற்போது கடின உடல் பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றின் மூலம் எடையை குறைத்து, பழைய லுக்கிற்கு வர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.