ரம்யா பாண்டியன் மீண்டும் சேலை அழகில் புகைப்படம் வெளியிட்டு, ரசிகர்கள் மனதை வருடி வருகிறார். அந்த வகையில் தற்போது பட்டு சேலையில் முகம் காட்டாமல் இவர் வெளியிட்ட அழகிய போட்டோஸ் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
இதை தொடர்ந்து, மீண்டும் விஜய் டிவி-யில் இருந்து வந்த, பிக்பாஸ் அழைப்பை ஏற்று கொண்டு... மிகவும் திறமையாக இந்த நிகழ்ச்சியில் விளையாடிய ரம்யா பாண்டியன், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த பின்னர் கடைசி நாளில் தான் வெளியேறினார்.
தற்போது கூட, வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்று கொள்ளாமல்... தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என, தன்னுடைய மனதிற்கு நிறைவான கதையும் கதாபாத்திரத்தையும் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார் .
தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா, தமிழகத்தின் பிரமாண்ட கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பட்டு புடவையில், முகம் காட்டாமல் பின்னகழை மட்டுமே காட்டி வளைய வளைய போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்ப்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.