Vijay TV Pugazh : கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலியை திருமணம் செய்துகொண்ட புகழ், திருமணம் முடிந்த கையோடு வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தின் முன் நின்று அவரை வணங்கி ஆசி பெற்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்பு டா நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜி, ராமர், அமுதவாணன் ஆகியோருடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்து வந்தவர் புகழ். இந்நிகழ்ச்சியில் இவர் அந்நியனாக நடித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கினார் புகழ். இந்நிகழ்ச்சி இவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
24
இந்நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் மக்களிடம் வரவேற்பை பெற்றதோடு, இவருக்கான ரசிகர் வட்டமும் பெரிதானது. முதல் இரண்டு சீசன்களில் முழுமையாக கலந்துகொண்ட புகழ், மூன்றாவது சீசனில் அவ்வப்போது மட்டும் வந்து பங்கேற்றார். இதற்கு காரணம் அவர் சினிமாவில் அந்த அளவுக்கு பிசியாகிவிட்டார். தற்போது இவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்களும் உள்ளன.
இவ்வாறு சின்னத்திரையில் இருந்து சினிமாவில் சக்சஸ்புல் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் புகழ், ஆரம்பகாலகட்டத்தில் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இவர் காமெடி நிகழ்ச்சிகளில் இந்த அளவு பேமஸ் ஆனதற்கு வடிவேல் பாலாஜியும் ஒரு முக்கிய காரணம் என புகழ் பல மேடைகளில் கூறி இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலியை திருமணம் செய்துகொண்ட புகழ், திருமணம் முடிந்த கையோடு வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தின் முன் நின்று அவரை வணங்கி ஆசி பெற்றுள்ளார்.
44
இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகழ், அந்த பதிவில் கூறியுள்ளதாவது : “இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா... உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன். எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.