நடிகரும், அரசியல்வாதியுமான் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன்மூலம் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த ஓராண்டில் ரிலீசான பெரும்பாலான படங்களை இவரின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. தற்போது வாரத்திற்கு ஒரு படத்தை வெளியிடும் அளவிற்கு இவர்கள் கைவசம் படங்கள் குவிந்து வருகின்றன.