நயன்தாரா, அஜித், ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர் - நடிகைகள் உதவியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

First Published Sep 5, 2022, 1:58 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும், பிரபலங்களின் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தமிழ் திரையுலக முன்னணி நடிகர்- நடிகைகளின் சம்பளப் பணத்தை தவிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அவர்களது உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் தொகை தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முன்னணி நடிகர் - நடிகைகள், ஒரு படத்தில் கமிட் ஆகும் போதே தங்களுடைய உதவியாளர்களான, மேக்கப் மேன், டச் அப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட், காஸ்டியூம் டிசைனர், பவுன்சர், போன்றவர்களின் சம்பளத்தையும் தயாரிப்பாளர் தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும், என்கிற நிபந்தனையோடு தான் படத்தில் நடிக்க கையெழுத்து போடுகிறார்கள். இதனால் நடிகர், நடிகைகள் சம்பள பணத்தை தவிர தயாரிப்பாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த தகவல் தான் இப்போது கோலிவுட் திரையுலகில் விவாத பொருளாக மாறியுள்ளது.

மேலும் செய்திகள்: மூன்றாவது முறையாக காதலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் புகைப்படம்!
 

இது போன்ற சில பிரச்சனைகளை முன்னிறுத்தி தான், தெலுங்கு திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதில் குறிப்பாக நடிகர்- நடிகைகளின் உதவியாளர்களுக்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றும்,  அதனை அவர்களே ஏற்று கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தனர். 

அதே போல் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சம்பந்தப்பட்டவர்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு  திரையுலகை சேர்ந்த  நடிகர் நடிகைகளின் சம்பளத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும், ஓ டி டி வெளியீட்டில் புதிய முறையை கொண்டு வர வேண்டும் என்றும் சில கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்திய நிலையில், சில புதிய முறைகளும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் தான் இம்புட்டு நாளா ஊர் சுற்றுகிறாரா அஜித்..! வெடித்தது புது சர்ச்சை
 

இதே முறையை தமிழிலும் கொண்டுவர வேண்டும் என, தமிழ் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள் தற்போது முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. காரணம் நடிகர் நடிகைகளின் உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு மட்டும் ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்படுவது தான். 

நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட்,  டச் அப் பாய், போன்ற அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு மட்டும் 80 ஆயிரம் ரூபாய் பெறுகிறார். இதே போல் நயன்தாரா உதவியாளர்களுக்கு 65 ஆயிரம் ரூபாயும், சமந்தா, ராசி கண்ணா ஆகியோர் உதவியாளர்களுக்கு 60 ஆயிரம் வழங்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் உதவியாளர்களுக்கு 55 ஆயிரம் ரூபாயும், திரிஷா உதவியாளர்களுக்கு 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: தம்மாத்தூண்டு நீச்சல் உடை அணிந்து... ஸ்லோ மோஷனில் ஆடி இளசுகளை கிறங்கடிக்கும் திவ்ய பாரதி - வைரலாகும் வீடியோ
 

நடிகர் சிம்பு சுமார் 21 உதவியாளர்களுடன் 'பத்து தல' படப்பிடிப்புக்கு வருகை தந்ததாகவும், அவர்களுக்கு மட்டும் ரூபாய் 80 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது, சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்தின் உதவியாளர்களுக்கு, 75 ஆயிரம் ரூபாயும், தனுஷ் உதவியாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், விஜயின் உதவியாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

இவர்களை தவிர சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், விஷால், ஆகியோர் தங்களுடைய மேக்கப் மேன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே ரூபாய் 15 ஆயிரம் வரை பெற்றுக் கொள்கிறார்கள். சமுத்திரகனி உதவியாளருக்கு 35 ஆயிரம் ரூபாயும், அதர்வா உதவியாளருக்கு 27 ஆயிரம் ரூபாயும் வழங்க பட்டு வருகிறது.

நடிகர் அஜீத் 'வலிமை' படத்துடன் தன்னுடைய உதவியாளரை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதுவரை தன்னுடைய உதவியாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் தற்போது நடித்து வரும் ஏகே 61-ஆவது படத்தில் படக்குழுவினர் நியமித்த உதவியாளரையே பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, நடிகர் - நடிகைகள் மிகவும் தனித்துவமான ஆடைகளையே தங்களுடைய படங்களில் அணிந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பதால், காஸ்டியூம் டிசைனருக்காக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சுமார்10 முதல் 20 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்: 42 வயதில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ரகசிய திருமணம்.. மணப்பெண் இந்த நடிகையா?
 

சில நடிகர் - நடிகைகள் தங்களுடைய உதவியாளர்கள், பவுன்சர்கள், மேக்கப் ஆர்டிஸ்ட், ஸ்டைலிஸ்ட் போன்றவர்களை மும்பையில் இருந்து வரவழைப்பதாகவும்... எனவே  அவர்களுக்கான தங்கும் வசதி, உணவு, கார், போன்ற அனைத்து செலவுகளையும் தயாரிப்பாளர் தரப்பினர் தான் செலவு செய்கின்றனர். நடிப்பது தமிழ் படமாக இருந்தாலும், இங்குள்ள திறமையான கலைஞர்களை புறக்கணித்து விட்டு வெளி மாவட்டங்களில் இருந்து உதவியாளர்கள் அழைத்து வர படுவதால், இங்குள்ள பலரது வாய்ப்பை அவர்கள் தட்டிப் பறிப்பது போல் உள்ளது என சிலர் குமுறி வகிறார்கள்.

vijay

லட்ச கணக்கில்... கோடி கணக்கில் சம்பளத்தை கறாராக தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி கொள்ளும் நடிகர் - நடிகைகள் உதைவியாளர்களுக்கும் சேர்த்து, பல லட்சம் தயாரிப்பாளரை செலவு செய்ய வைக்கிறார்கள் எனவே இதற்க்கு தீர்வு கொண்டு வர, தெலுங்கு திரையுலகில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளை, தமிழுக்கும் கொண்டு வந்தால் தான்,  இதுபோன்ற சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கோலிவுட் வட்டார தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது? இது போன்ற முறைகளை கொண்டு வர தமிழ் திரையுலக தயாரிப்பாளர்களும் போர் கொடி தூக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!