விஜய் டிவியில் வைகைப்புயல் வடிவேலுவின், முக தோற்றதோடு வலம் வந்தவர், வடிவேல் பாலாஜி. சிலர் பேசினால் தான் சிரிப்பு வரும், ஆனால் இவரை பார்த்தாலே பலர் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய வசீகரமான காமெடியால், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். குறிப்பாக சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வந்த, 'இது அது எது' நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு சுற்றில் பல வேடங்களில் வந்து பிரபலங்களை சிரிக்க வைப்பர்.