பிரபல சேனல்களில் சீரியல் மற்றும் தொகுப்பாளராக பிரபலமானவர் விஜே மகாலட்சுமி. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற மகாலட்சுமிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திடீர் திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி. இது குறித்த சோசியல் மீடியாவில் பலவாறான கமெண்ட்டுகள் எழுந்தன. மிகவும் உடல் எடை கூடி காணப்படும் ரவீந்திரன் பிக் பாஸ் விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர். வனிதாவின் திருமணம் குறித்து இவர் பேசியிருந்த வீடியோக்கள் வைரலானதோடு வனிதாவிடம் இருந்து கடுமையான விமர்சனங்களையும் பெற்று இருந்தார்.
தற்போது ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறிவிட்டது. youtube சேனல்கள் பலவும் இவர்களை வைத்து இன்டர்வியூ செய்து தங்களது வருமானத்தை அதிகப்படுத்திக் கொண்டன. அதோட அந்த youtube-களுக்கு வரும் கமெண்ட்கள் மிகவும் மோசமானதாகவே இருந்தது. அதோடு பிரபலம் ஒருவரும் இவர்களது இன்டர்வியூ குறித்து கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார்.
இந்த சூழலில் மஹாலட்சுமி மற்றும் ரவீந்திரன் இருவரும் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் தனது கணவரின் உருவம் குறித்து யாரும் கேலி செய்ய வேண்டாம். உங்களுடைய உறவுகள் இதுபோன்று இருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா என உருக்கமாக கூறியுள்ள மஹாலட்சுமி இந்த கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் என சூளுரைத்துள்ளார்.
அதேபோல தனது மனைவியான மகாலட்சுமியை யாரும் அழவைக்க இயலாது. இது எங்களுடைய வாழ்க்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களைப் பற்றி யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. இனிமேலாவது இதுபோன்று கமெண்ட்களை செய்யாமல் இருங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் அம்மா, அக்கா போன்றோரை அழைத்து அந்த கமெண்ட்களை படிக்க சொல்லுங்கள். அவர்களுக்கு எவ்வாறான உணர்வு இருக்குமோ அதே உணர்வு தான் எங்களுக்கும் இருக்கும். மகாலட்சுமிக்கு முன்னால் யானை போல் நான் இருக்கிறேன் அவளை என்னை தாண்டி தான் அழ வைக்க இயலும். மிக விரைவில் நான் மகாலட்சுமிக்காக உடல் எடையை குறைத்துக் கொள்வேன். எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது நாங்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வோம் எங்களைப் பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை என பேசி உள்ளார் தயாரிப்பாளர் ரவீந்திரன்