சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் விருமன் இந்த படத்தில் அதிதி சங்கர் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். முத்தையாவின் வழக்கமான கிராமத்து நாயகன் பாணிகள் கார்த்தி தோன்றி ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்துவிட்டார். ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், கருணாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த மாதம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில்உருவாகி இருந்த இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வெற்றியை கண்டது.
படம் 38.4 கோடிகளை வசூலாக பெற்றிருந்தது. இந்நிலைகள் விருமன் படம் ஓடிடிக்கு வரும் தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதன்படி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இந்த பட ஓடிடி ரிலீஸ் செப்டம்பர் 11ஆம் தேதி என அறிவிக்கப்ட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ இதன் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது அதோடு விருமன் வெளியிடப்படுவதை அமேசான் நிறுவனம் தங்களது சோசியல் மீடியாவில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.