என் தாய் சேயாகிறாள்.. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தாய்! கண்ணீருடன் பிரபல தமிழ் நடிகர் போட்ட பதிவு!

Published : Mar 05, 2023, 09:15 AM IST

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான காமெடி நடிகர் ஜெகன் தன்னுடைய தாயாருக்கு உடல் நலம் சரி இல்லை என்றும், அவர் குழந்தை போல் மாறி வருவதாக மிகவும் உருக்கமாக போட்டுள்ள பதிவு, பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
14
என் தாய் சேயாகிறாள்.. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தாய்! கண்ணீருடன் பிரபல தமிழ் நடிகர் போட்ட பதிவு!

விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பான 'கடவுள்பாதி மிருகம்பாதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் காமெடி நடிகர் ஜெயகன். பின்னர் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்த இவர், 2005 ஆம் ஆண்டு பிரசன்னா - லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் அறிமுகமானார்.

24

இதை தொடர்ந்து  அயன், பையா, கோ, வல்லினம், வில் அம்பு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் பிரபு தேவா நடித்த பொய் கால் குதிரை படத்தில் நடித்திருந்த ஜெகன், தற்போது 'பள்ளு படமா பாத்துக்கோ' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம்! அடித்து துரத்தமாட்டோம்! திமுகவை சீண்டிய கஸ்தூரி

34

மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, மற்றும் விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாயார் குறித்து, கண் கலங்கியபடி போட்டுள்ள பதிவு பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

44

இந்த பதிவில், என் தாய்சேயாகிறாள், உடல் நலம் குறைந்நு எங்களை ஈன்றவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்... ஏதுமறியா குழந்தைப்போல் உறங்குகிறாள்... எங்களை ஈன்றபோது
எத்தனை இரவுகள்... இப்படிதானே கவலை தோயத்த அக்கறையுடன் எங்களை கவனித்திருப்பாய்.

இந்த ஓர் இரவில் என் நன்றி கடனை திரும்ப தர இயலாது என்பதை எண்ணி கூனிப்போகிறேன்... உன் நலம் வேண்டி என் சிவனை வேண்டுகிறேன். என பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, ரசிகர்களும் அவரின் தாயார் நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பாக்கியா செய்த தரமான சம்பவம்.. தெறித்து ஓடிய கோபி! அடேங்கப்பா வேற லெவலுக்கு கெத்து காட்டுறாங்களே!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories