நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பத்து தல. ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படம் கன்னடத்தில் ஷிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த மஃப்டி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் தழுவலாக தயாராகி உள்ளது. மணல் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
24
பத்து தல படத்தில் சிம்பு உடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஏஜிஆர் என்கிற மாஸான கேங்ஸ்டராக நடித்துள்ள சிம்புவின் அதிரடி ஆக்ஷன் கலந்து வெளியிடப்பட்ட இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இப்படத்தின் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா, தமிழ்சினிமாவில் காதல் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகளான ஆர்யாவும், சாயிஷாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தகவலை வெளியிட்டார்.
44
இவ்ளோ நாள் சீக்ரெட்டாக வைத்திருந்த இந்த விஷயத்தை தற்போது இயக்குனர் வெளியிட்டதும் பலரும் ஷாக் ஆகினர். அவர்களுக்கு என்ன ரோல் என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக உள்ளனர். ஆர்யாவும் சாயிஷாவும் இதற்கு முன் கஜினிகாந்த், டெடி போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்த நிலையில், தற்போது பத்து தல படத்துக்காக மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.