பயம் காட்டிய லியோவிற்கு பாடம் புகட்ட... உலக சுற்றுலாவை தள்ளிவைத்த அஜித்! ஏகே 62-வின் தரமான சம்பவம் லோடிங்

Published : Mar 04, 2023, 01:55 PM ISTUpdated : Mar 04, 2023, 06:35 PM IST

ஆகஸ்ட் மாதம் தனது உலக சுற்றுலாவை தொடங்க திட்டமிட்டிருந்த அஜித், தற்போது ஏகே 62 படத்திற்காக அதனை தள்ளிவைத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
15
பயம் காட்டிய லியோவிற்கு பாடம் புகட்ட... உலக சுற்றுலாவை தள்ளிவைத்த அஜித்! ஏகே 62-வின் தரமான சம்பவம் லோடிங்

நடிகர் அஜித் பைக்கின் மீது அதீத பிரியம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் எங்காவது ரைடுக்கு கிளம்பி விடுவார். அப்படித் தான் துணிவு பட ஷூட்டிங் சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரங்களில் வட இந்தியா முழுவதும் ஜாலியாக பைக் ட்ரிப் சென்று வந்தார் அஜித். இந்த ட்ரிப்பில் நடிகை மஞ்சு வாரியரும் கலந்துகொண்டு அஜித்துடன் ஜோடியாக வலம் வந்தார்.

25

நடிகர் அஜித்திற்கு பைக்கில் உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவே இருந்து வருகிறது. இதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என முடிவெடுத்த அஜித், தனது ஏகே 62 படத்தின் பணிகளை முடித்த பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிப்பதற்கு ரெஸ்ட் விட்டு தனது உலக சுற்றுலாவை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கான பணிகளும் ஒருபக்கம் நடந்து வந்ததாம்.

35

இதனிடையே சமீபத்தில் ஏகே 62 படத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றத்தால் அஜித் தனது உலக சுற்றுலாவை தள்ளிவைக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி முதலில் ஆகஸ்ட் மாதம் தனது உலக சுற்றுலாவை தொடங்க திட்டமிட்டிருந்த அஜித், அதற்குள் ஏகே 62 பட ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் என கூறி வந்தாராம். மார்ச் மாத இறுதியில் தொடங்கி 4 மாதத்தில் எப்படி ஷூட்டிங்கை முடிப்பது என குழம்பிப்போய் இருந்த மகிழ் திருமேனிக்கு தற்போது குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளாராம் அஜித்.

இதையும் படியுங்கள்... நடிக்க வருவியாடா... வடிவேலுவை நெஞ்சுலயே மிதிச்சு துரத்திவிட்டாரு கவுண்டமணி - பிரபல நடிகர் சொன்ன ஷாக் தகவல்

45

படத்தை அவசர அவசரமாக எடுத்து சொதப்பிவிட வேண்டாம். உங்கள் ஸ்டைலிலேயே நன்றாக எடுங்கள் நான் எனது உலக சுற்றுலா பயணத்தை கூட ஒரு சில மாதங்களுக்கு தள்ளிவைத்துக் கொள்கிறேன் என அஜித் சொன்னதும் உற்சாகமடைந்த மகிழ் திருமேனி. ஏகே 62-வை தரமான படமாக எடுத்துவிடலாம் என சொல்லி அப்படத்தின் வேலைகளை புத்துணர்ச்சியுடன் மேற்கொண்டு வருகிறாராம்.

55

ஒருபக்கம் நடிகர் விஜய்யின் லியோ படக்குழு பிரம்மாண்டமாக தயாராகி வருவதும் அஜித்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. லியோ காட்டிய பயத்தால் தான் முதலில் விக்னேஷ் சிவனை இப்படத்தில் இருந்து நீக்கியதாகவும், தற்போது மகிழ் திருமேனியை வைத்து தரமான சம்பவம் செய்ய அஜித் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. லியோ படத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஏகே 62 படத்தின் அப்டேட் இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... இந்த காலத்துல இப்படி ஒரு ஹீரோயினா..! படம் பிளாப் ஆனதால்... சம்பளம் வேண்டாம் என சொன்ன ‘வாத்தி’ நடிகை சம்யுக்தா

click me!

Recommended Stories