இதனிடையே பத்து தல படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் கூல் சுரேஷும் வந்து கலந்துகொண்டார். அப்போது பொன்னியின் செல்வன் படம் பார்க்க குதிரையில் வந்ததுபோல், பத்து தல படம் பார்க்க ஹெலிகாப்டரில் வரும் ஐடியாவில் இருப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தாலும், சீரியஸாக பேசிய கூல் சுரேஷ், தற்போது அதற்கான அனுமதி வாங்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். வீட்டை வித்தாவது ஹெலிகாப்டரில் வருவேன் என அவர் கூறினார்.