இப்படி சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் வடிவேலு, நிஜ வாழ்வில் மிகவும் சுயநலமானவர் என அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் வடிவேலு கவனமாக இருப்பார் என்றும் அவர் மீது தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மீசை ராஜேந்திரன், முத்துக்காளை என ஏராளமான நடிகர்கள் அண்மையில் வடிவேலு குறித்து மனம்திறந்து பேசிய நிலையில், தற்போது நடிகர் சிசர் மனோகர் வடிவேலுவை கவுண்டமணி மிதித்த சம்பவம் குறித்து பேசி உள்ளார்.