இந்த காலத்துல இப்படி ஒரு ஹீரோயினா..! படம் பிளாப் ஆனதால்... சம்பளம் வேண்டாம் என சொன்ன ‘வாத்தி’ நடிகை சம்யுக்தா

Published : Mar 04, 2023, 08:34 AM IST

வாத்தி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா, தான் நடித்த படம் பிளாப் ஆனதால் சம்பளம் வாங்க மறுத்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

PREV
14
இந்த காலத்துல இப்படி ஒரு ஹீரோயினா..! படம் பிளாப் ஆனதால்... சம்பளம் வேண்டாம் என சொன்ன ‘வாத்தி’ நடிகை சம்யுக்தா

மலையாளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பாப்கார்ன் என்கிற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சம்யுக்தா. இதையடுத்து தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்களில் நடித்த சம்யுக்தாவுக்கு அப்படங்கள் கைகொடுக்காததால், மீண்டும் மலையாள படங்களில் மட்டும் நடிக்கத் தொடங்கிய அவருக்கு தனுஷ் அளித்த ஜாக்பாட் வாய்ப்பு தான் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா.

24

வாத்தி திரைப்படம் கடந்த மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 2 வாரங்களை கடந்து வெற்றிநடை போட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. வாத்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை சம்யுக்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் செம்ம குஷியில் இருக்கிறார் சம்யுக்தா.

இதையும் படியுங்கள்... Watch : செம்ம மாஸா இருக்கே... வெளியானது வாரிசு படத்தின் டெலிடட் சீன்

34

இந்நிலையில், நடிகை சம்யுக்தா, தனது நடிப்பில் வெளியான திரைப்படம் பிளாப் ஆனது தெரிந்ததும் தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்க மறுத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மலையாள தயாரிப்பாளரான சாண்ட்ரா தாமஸ் என்பவர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘எடக்காடு பட்டாலியன்’. இப்படத்தில் நடிகை சம்யுக்தா தான் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்திற்காக முதலில் 65 சதவீதம் சம்பளத்தை வாங்கிவிட்ட சம்யுக்தா, எஞ்சியுள்ள சம்பளத்தை ரிலீசுக்கு பின் வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

44

 

இப்படம் ரிலீசாகி தோல்வி அடைந்ததை அடுத்து, தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ், சம்யுக்தாவிற்கு எஞ்சியுள்ள சம்பளத்தை கொடுக்க சென்றுள்ளார். அப்போது படம் தோல்வி அடைந்ததால் அந்த தொகையை சம்யுக்தா வாங்க மறுத்துவிட்டாராம். கேட்ட சம்பளம் கொடுக்கலேனா டப்பிங் பேச மாட்டேன், புரமோஷனுக்கு வர மாட்டேன்னு முரண்டு பிடிக்கும் நாயகிகள் இருக்கும் இந்த காலத்தில், இப்படி ஒரு நடிகையா என வாயடைத்து போனார் சாண்ட்ரா தாமஸ். நடிகை சம்யுக்தாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... மதம் தாண்டிய மனிதமே முக்கியம்! ரோலர் கோஸ்டர் உணர்வுகளோடு வெளியான அயோத்தி எப்படி இருக்கு?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories