குக் வித் கோமாளி சீசன் 4 - புகழ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவும் ஒன்று. கடந்த 2019 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி முதல் சீசனை தொடங்கியது. இதில் பாலா, புகழ், மணிமேகலை, ஷிவாங்கி என்று ஒவ்வொருவரும் கலக்கினர்.
புகழ் இன்ஸ்டாகிராம்
இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழவதும் வரவேற்பு கிடைத்தது. இதனால், அடுத்தடுத்த சீசனில் வெற்றிநடை போட்டு தற்போத் 4ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலமாக அஸ்வின், ஷிவாங்கி, பாலா, புகழ், ரோஷினி என்று ஒவ்வொருவரும் பிரபலமாகினர்.
புகழ் அரைச்ச சந்தனம் பாடல்
அஸ்வின் ஹீரோவாக வலம் வருகிறார். இதற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஆபிஸ் என்ற தொலைக்காட்சியில் நடித்திருந்தார். ஆனால், அப்படி ஒன்றும் அவர் சோபிக்கவில்லை. இந்த நிகழ்ச்சி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ஷிவாங்கியும் டான் படத்தின் மூலமாக சினிமாவில் கால் பதித்துவிட்டார். பாலாவும், சினிமாவில் வலம் வருகிறார்.
புகழ் குக் வித் கோமாளி சீசன் 4
இவர்களது வரிசையில் புகழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். அஜித் நடிப்பில் வந்த வலிமை படத்தில் அவருடன் இணைந்து நடித்துவிட்டார். வீட்ல விசேஷம், எதற்கும் துணிந்தவன், டிஎஸ்பி, கடைசி காதல் கதை, யானை, ஏஜெண்ட் கண்ணாயிரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
புகழ் பெண் வேடம்
தற்போது காசேதான் கடவுளடா, குதூகலம், ராதாகிருஷ்ணா, Mr. Zoo Keeper, ஆகஸ்ட் 16 1947 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அவர் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, அவருக்குப் பதிலாக அவரது இடத்தை நிரப்பும் வகையில் பாலா கலக்கினார்.
புகழ் - குக் வித் கோமாளி 4
இந்த சீசனில் பாலா கலந்து கொள்ளவில்லை. அவரது இடத்தை நிரப்பும் வகையில் புகழ் கலக்கி வருகிறார். இவர் ஒருவராக இந்த நிகழ்ச்சியை தனது தோளில் சுமந்து வருகிறார் என்றால் அது மிகையாகாது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4ஆவது சீசனுக்கான முதல் எபிசோடு ஆரம்பமான நிலையில் தற்போது 11ஆவது சீசனுக்கான புரோமோ வெளியாகியிருக்கிறது.
புகழ் - சின்னத்தம்பி பாடல்
இதில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு புகழ் பெண் வேடத்தில் வருகிறார். பிரபு, குஷ்பு நடிப்பில் வந்த சின்னத்தம்பி பாடலுக்கு புகழ் சோகமாக நடனமாடி அனைவரையும் வியக்க வைக்கிறார். அவருடன் இணைந்து செஃப் வெங்கடேஷ் பட்டும் கலக்குகிறார். இதையடுத்து, அரைச்ச சந்தனம் பாடலுக்கு அனைவருடனும் இணைந்து டான்ஸ் ஆடுகிறார். இது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.
புகழ் - குக் வித் கோமாளி சீசன் 4
இது கெட்டப் குறித்து புகழ் கூறியிருப்பதாவது: மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் வேடம் போட்டு இருக்கிறேன். மக்கள் மத்தியில் புகழ் யார் என்று தெரிய வைத்தது இந்த வேடம் தான். மீண்டும் அதனை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி. இத்தனை தூரம் என்னை அழைத்து வந்துள்ள என் அன்பு உடன் பிறப்புகளுக்கு நன்றி.
புகழ் - காந்தாரா
தொடர்ந்து உங்கள் ஆதரவோடு மக்களை மகிழ்விப்பேன். அன்பும், நன்றிகளும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்... மன்னிகனும் குஷ்பு சுந்தர் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த எபிசோடில் புகழ் காந்தாரா வேடத்தில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.