Deepika Padukone
பெங்களூரைச் சேர்ந்த நடிகை தீபிகா படுகோன், கன்னட முன்னணி நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பாலிவுட் திரையுலக சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஓம் சாந்தி ஓம்' என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவரின் முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
குறிப்பாக பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வரலாற்று காவியமாக வெளியான பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், ராம் - லீலா போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. நடிகை தீபிகா படுகோனே சௌந்தர்யா ரஜினிகாந்த் 3டி தொழில்நுட்பத்தை கொண்டு, தன்னுடைய தன்னை ரஜினிகாந்தை ஹீரோவாக வைத்து இயக்கிய கோச்சடையான் படத்தில், ஹீரோயினாக நடித்திருந்தார்.
குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகியது ஏன்..? காட்டமாக பதிலளித்த புகழ்..!
இந்நிலையில் ஏற்கனவே தீபிகா படுகோன் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராக இருந்தது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தீபிகா படுகோன் விரைவில் நடைபெறவுள்ள 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதை வென்ற பிரபலங்களுக்கு அவ் விருதுகளை வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஆஸ்கர் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பட்டியலில், எமிலி பிளண்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டான், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இந்த விருது வழங்குபவர்கள் பட்டியலில் உள்ளனர். 95வது ஆஸ்கார் விருதுகள் விழா ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 12, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உறுப்பு மாற்று செய்யப்பட்ட பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்! திரையுலகில் பரபரப்பு!