கொஞ்சம் சமையல், நிறைய கலாட்டா... என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில், கடந்த மூன்று சீசன்களாக கோமாளிகளில் ஒருவராக இருந்து வந்த மணிமேகலை, நானே வருவேன் கெட்டப்பில்.. இனி நான் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என கூறி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியான காரணத்தை அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் குறிப்பாக விஜய் டிவி நிகழ்ச்சி தரப்புடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே அவர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக ஒரு தரப்பு ரசிகர்களும், மற்றொரு தரப்பினர் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறி அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி புகழிடம் சக கோமாளிகளில் ஒருவரான மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு புகழ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது அவரது தனிப்பட்ட விஷயம். அதேபோல் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறீர்கள், அதைப்பற்றி எனக்கு தெரியாது... அதேநேரம் தயவுசெய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடாதீர்கள். ஒரு வேலை மணிமேகலை கர்ப்பமாக இருந்தால் அது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அவர் தன்னுடைய தனிப்பட்ட விஷயத்திற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கலாம்.. பட்டும் படாமல் காட்டமாக பதிலளித்தார்.