நடிகர் தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். ஐஸ்வர்யா கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இயக்க உள்ள 'லால் சலாம்' படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்த பேட்டியில், நடிகை ஜீவிதா கூறியுள்ளதாவது... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த உள்ளது உண்மைதான். மார்ச் 7ஆம் தேதி முதல், ஆரம்பமாகவுள்ள 'லால் சலாம்' படத்தில் நானும் இணைகிறேன். நானும் ரஜினிகாந்த் சாரும் நடிக்க உள்ள முக்கிய காட்சிகள், திருவண்ணாமலையில் முதல் கட்டமாக பணமாக்கப்பட உள்ளது. குறிப்பாக ரஜினிகாந்த் சாருடன் எனக்கு நிறைய காம்பினேஷன் சீன்கள் உள்ளது.
மேலும் ரஜினிகாந்த் சாரின் மகள் ஐஸ்வர்யா தனக்கு நீண்ட நாட்களாக தோழி என்றும், அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என இருவரும் ஆலோசித்து வந்த நிலையில், இறுதியாக அவருடன் இப்படத்தில் இணைவது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். என் குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமல்ல. எனினும் இப்படத்தை நான் ஏற்றுக்கொள்ள சில நாட்கள் தேவைப்பட்டது.