ஜெயம் ரவி நடித்த 5 படங்கள் இந்த வருடம் ரிலீஸ்... பொன்னியின் செல்வனுக்கு இது பொன்னான ஆண்டாக அமையுமா?

Published : Mar 04, 2023, 03:05 PM IST

பொன்னியின் செல்வன் 2, அகிலன், இறைவன், சைரன் உள்பட நடிகர் ஜெயம் ரவி நடித்த 5 திரைப்படங்கள் இந்த வருடம் ரிலீஸ் ஆக உள்ளன.

PREV
17
ஜெயம் ரவி நடித்த 5 படங்கள் இந்த வருடம் ரிலீஸ்... பொன்னியின் செல்வனுக்கு இது பொன்னான ஆண்டாக அமையுமா?

பிரபல சினிமா எடிட்டர் மோகனின் மகனான ரவி, ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது அண்ணன் ராஜா தான் இயக்கினார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்ததால் அதுவே அவருக்கு அடையாளமாக மாறி அவரை ஜெயம் ரவி என அனைவரும் அழைக்கத் தொடங்கினர். இதையடுத்து தொடர்ந்து ராஜா இயக்கத்தில் சந்தோஷ் சுப்ரமணியம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் நடித்து வெற்றிகண்ட ரவி, குறுகிய காலத்திலேயே கவனிக்கத்தக்க ஹீரோவாக உயர்ந்தார்.

27

இதன்பின் வெளி இயக்குனர்களுடன் பணியாற்ற தொடங்கிய ரவி, பேராண்மை, தீபாவளி, மழை, தாம்தூம், ரோமியோ ஜூலியட், பூலோகம் என ஹிட் படங்களாக நடித்து கலக்கினார். இடையே ராஜா இயக்கத்தில் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படம், அவரது கெரியரிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்து கடைசியாக தியேட்டரில் ரிலீஸ் ஆன படம் கோமாளி. லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

37

இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அவர் நடித்த சோலோ ஹீரோ படங்கள் ஒன்று கூட தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் மல்டி ஸ்டாரர் படமாக இருந்தாலும், அதில் ஜெயம் ரவிக்கு குறைந்த அளவிலான காட்சிகளே இருந்தன. அதன் இரண்டாம் பாகத்தில் தான் அவருக்கு அதிகளவில் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... சிம்புவின் பத்து தல படத்தில் இந்த நட்சத்திர ஜோடியும் நடிச்சிருக்காங்களா..! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே

47

அதற்கு முன் அவர் சோலோ ஹீரோவாக நடித்த அகிலன் திரைப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

57

இதையடுத்து அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் என்கிற படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

67

இதற்கு அடுத்தபடியாக இளம் இயக்குனர் ஆண்டணி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

77

இதுதவிர சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தையும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இப்படி ஜெயம் ரவி நடித்த 5 படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இந்த படங்கள் எல்லாம் வெற்றியடைந்தால் ஜெயம் ரவிக்கு இது பொன்னான ஆண்டாக அமைவது உறுதி. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம்! அடித்து துரத்தமாட்டோம்! திமுகவை சீண்டிய கஸ்தூரி

Read more Photos on
click me!

Recommended Stories