தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், தற்போது அமெரிக்காவில் சினிமா மேக்கிங் குறித்த படிப்பை படித்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் ஷாட் பிலிம் எடுக்கும் இவரின் வீடியோ மற்றும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாவது வழக்கமாக உள்ளது நாம் அறிந்ததே.
இந்த படத்தை நடிகர் சூர்யாவை வைத்து 'சூரரைப் போற்று' படத்தை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளாராம்.
சஞ்சய் இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதை மனதில் வைத்து, சுதா கொங்கரா... இந்த படம் குறித்து நேரடியாக விஜய்யிடம் பேசியதாகவும், விஜய் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர் விஜய்க்கு நட்பு ரீதியில் நன்கு தெரிந்தவர் என்பதால், சுதா கொங்கரா தன்னுடைய மகனுக்கு கொடுப்பதாக கூறிய வாய்ப்பை தட்டி கழிக்காமல் பதில் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இந்த கதை குறித்து, விரைவில் சஞ்சய்யிடம் நேரிலோ அல்லது போன் மூலமாகவே சுதா கொங்கரா பேசுவார் என தெரிகிறது. ஒரு வேலை சஞ்சய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் தளபதிக்கு போட்டியாகவே அவன் மகனும் களம் இறங்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.