இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புக்ஸ் புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வருகை தந்து புத்தக விற்பனையகத்தை திறந்து வைத்தார்.
25
இந்த விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், புத்தக விற்பனை நிலையத்தை கமல் திறந்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தைரியமாக சென்று பார்த்தேன். நேற்று சொன்னதும் அவர் இன்று வந்துவிட்டார். அவருக்கு பெரிய மனது. புத்தகம், இலக்கியங்கள் மீது காதல் கொண்டிருக்கும் அவர் வந்தது மிக்க மகிழ்ச்சி.
புத்தகங்கள் தான் சினிமாவின் பக்கம் என்னை கொண்டு சென்றன. வாசிப்பின் வழியே உலகம் விரிந்தது. சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியவர் கமல். விருமாண்டி’ படத்தை எழுதிய விதம் அந்த வாழ்க்கை முறையை கையாண்ட முறை ஆச்சரியமளிக்கிறது என்று பேசினார்.
45
அடுத்து பேசினார் கமல் ஹாசன். அப்போது, அரசியலையும் கலாச்சாரத்தையும் தனித்தனியே வைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பேசுவது தான் அரசியல். தனது முதல் அரசியல் எதிரி சாதி.ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைக்கிறேன். தலைவர்களை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்களில் பலர் கீழே குடிமகன்களாக அமர்ந்திருக்கிறார்கள்.
55
கொடூரமான ஆயுதம் சாதி. அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என எனக்கு மூன்று தலைமுறைக்கு முந்தைய அம்பேத்கரிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் நடந்தபாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் நீட்சியாகத் தான் நீலம் பண்பாட்டு மையத்தையும் பார்க்கிறேன் என்று கூறினார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் குடும்பத்துடன் கமல் ஹாசன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.