நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன முதல் படம் ஏஸ். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். அதிலும் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த படம் தான் ஏஸ். இப்படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் தான் தயாரித்து இருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருந்தார்.
24
ஏஸ் படத்திற்கு வரவேற்பு எப்படி?
ஏஸ் திரைப்படம் கடந்த மே 23ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி - யோகிபாபு இடையேயான காமெடி காட்சிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும், படத்தின் திரைக்கதை வலுவாக இல்லாததால் ரசிகர்களை பெரியளவில் ஈர்க்கவில்லை. இதனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதுமட்டுமின்றி திரையரங்குகளில் சூரி நடித்த மாமன் திரைப்படம் வெற்றிநடைபோட்டு வருவதால் அதற்கு ஏஸ் படத்தால் டஃப் கொடுக்க முடியவில்லை.
34
ஏஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
கலவையான விமர்சனம் காரணமாக ஏஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மந்தமான நிலையிலேயே உள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன முதல் நாள் வெறும் ரூ.75 லட்சம் தான் வசூலித்திருந்தது. பின்னர் இரண்டாம் நாளில் ரூ.96 லட்சம் வசூலித்த இப்படம் மூன்றாம் நாளில் அதைவிட 7 லட்சம் மட்டுமே கூடுதலாக வசூலித்து 1.03 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 3 நாட்களில் ஏஸ் திரைப்படம் 2.75 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது.
விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஏஸ் படத்தின் வசூல் சரிவுக்கான முக்கிய காரணம் சூரியின் மாமன் படம் தான். அப்படம் இரண்டாம் வாரத்திலும் பேமிலி ஆடியன்ஸிடம் அமோக வரவேற்பை பெற்று வருவதால் ஏஸ் படத்தால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஏஸ் படம் தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் 2.75 கோடி தான் வசூலித்து இருந்தது. ஆனால் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படம் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் ரூ.3.13 கோடி வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது.