நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் காமெடி சூப்பர்ஸ்டார் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 172வது படம் ஜெயிலர் 2. இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அந்த ஆண்டு கோலிவுட்டில் அதிக வசூல் செய்த படமாகவும் ஜெயிலர் 2 திகழ்ந்தது. அந்த வெற்றிக்கூட்டணி தற்போது அதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
24
ஜெயிலர் 2-வில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமாரின் சர்ப்ரைஸான கேமியோ ரோல்கள் கிளிக் ஆனதால் அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதேபோல் ஜெயிலர் 2ம் பாகத்திலும் நிறைய ஆச்சர்யங்கள் ஒளிந்திருக்கிறதாம். அதன்படி ஜெயிலர் 2வில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். அதேபோல் மேலும் சில சர்ப்ரைஸ் கேமியோக்களும் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
34
ஜெயிலர் 2-வில் சந்தானம்
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஹீரோ ரோல்களில் மட்டும் நடித்து வந்த சந்தானம், சிம்புவின் எஸ்.டி.ஆர்.49 படத்திற்காக மீண்டும் காமெடியனாக அவதாரம் எடுத்துள்ளார். அதனால் அவருக்கு அடுத்தடுத்து காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் சூப்பர்ஸ்டார் படத்திலேயே எண்ட்ரி கொடுத்துள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் சந்தானம் இதற்கு முன்னர் ரஜினிகாந்த் உடன் இணைந்து எந்திரன், லிங்கா போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார். தற்போது ஜெயிலர் 2 மூலம் அவர்கள் இருவரும் ஹாட்ரிக் கூட்டணி அமைக்க உள்ளனர். சூப்பர்ஸ்டாரும், காமெடி சூப்பர்ஸ்டாரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதால் ஜெயிலர் 2 மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஜெயிலர் 2 திரைக்கு வர வாய்ப்பு உள்ளது.