சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பைனல் : டைட்டில் வின்னர் யார்? வாரி வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன?

Published : May 25, 2025, 09:27 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் நடைபெற்றது.

PREV
15
Super Singer Junior Season 10 Grand Finale

விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. இந்நிகழ்ச்சி, ஜூனியர்களுக்கு தனியாகவும், சீனியர்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அதன் 9-வது சீசன் இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீசனை வழக்கம்போல் மாகாபா மற்றும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கினார்கள். இடையில் சில எபிசோடுகள் மட்டும் பிரியங்கா ஆப்செண்ட் ஆனதால் அவருக்கு பதில் லட்சுமி பிரியா தொகுத்து வழங்கினார்.

25
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பைனல்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது ஒரு பிராண்ட் ஆக மாறி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றாலே சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்கிற நிலை தான் உள்ளது. இதில் பங்கேற்ற பலர் இன்று பின்னணி பாடகர்களாக கலக்கி வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமானே சூப்பர் சிங்கரில் இருந்து வந்த பாடகர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியை பாடகர் மனோ, பாடகி சித்ரா, இசையமைப்பாளர் டி இமான் ஆகியோர் நடுவர்களாக இருந்து வழிநடத்தினர்.

35
சிறப்பு விருந்தினராக கமல், ரகுமான்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி பல்வேறு சுற்றுகளைக் கடந்து இந்த வாரம் பைனல் நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்று போட்டிக்கு ஆத்யா, லைனட், நஸ்ரின், சாரா மற்றும் காயத்ரி ஆகிய நான்கு போட்டியாளர்கள் முன்னேறினர். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த முறை பைனலுக்கு தேர்வான அனைவருமே பெண்கள். இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் கமல்ஹாசன் குழந்தைகளோடு சேர்ந்து பாட்டுப் பாடியும் நடனமாடியும் அசத்தினார்.

45
சூப்பர் சிங்கர் சீசன் 10 டைட்டில் வின்னர் யார்?

இறுதியாக இந்த பைனல் நிகழ்ச்சியில் வெற்றியாளரை கமல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இருவரும் சேர்ந்து அறிவித்தனர். அதன்படி காயத்ரி தான் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 சீசனில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கமல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து டிராபி வழங்கினர். இரண்டாவது இடம் நஸ்ரினுக்கு கிடைத்தது. அதேபோல் மூன்றாம் இடத்தை சாரா ஸ்ருதி மற்றும் ஆத்யா தட்டிச் சென்றனர்.

55
பரிசுகள் என்னென்ன?

இதில் முதலிடம் பிடித்த காயத்ரிக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்த நஸ்ரினுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதேபோல் மூன்றாம் இடம்பிடித்த சாரா ஸ்ருதி மற்றும் ஆத்யா ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம், பரிசாக வழங்கப்பட்டது. வெற்றியாளர்களுக்கு கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து பரிசுகளை வழங்கினர்.

Read more Photos on
click me!

Recommended Stories