பிரவீன் பென்னெட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான மகாநதி சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பளம் பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலுக்கு அடுத்த படியாக விஜய் டிவி டிரெண்டிங் சீரியலாக ஒளிபரப்பாகி வருவது தான் மகாநதி. 'மகாநதி' சீரியலை, பிரவீன் பென்னெட் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கியவர் ஆவார்.
24
மகாநதி சீரியல் கதைக்களம்
மகாநதி சீரியலின் கதை என்னவென்றால், சந்தானம் என்பவர் கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு 4 மகள்கள். தன் மகள்களை எப்படியாக கரைசேர்க்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிற்கு போய் சம்பாதிக்கிறார். அவர் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த காசை எல்லாம் அவருடைய நண்பன் பசுபதிக்கு அனுப்புகிறார். பசுபதியோ அந்த பணத்தை சந்தானத்தின் குடும்பத்தினரிடம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்.
ஒரு கட்டத்தில் கொடைக்கானலில் இடம் வாங்க வரும் சந்தானம், பசுபதியிடம் பணம் கேட்க, அவரோ கைவிரிக்கிறார். நண்பன் செய்த துரோகத்தால் மனமுடைந்து போகும் சந்தானம் சோகத்தில் இறந்துவிடுகிறார். அதன்பின் அவருடைய நான்கு மகள்கள் எப்படி வாழ்க்கையை முன்னெடுத்து சென்றார்கள் என்பதே அதன் கதை.
34
மகாநதி சீரியல் நடிகர்கள் சம்பளம்
இந்த சீரியல் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுவாமிநாதன் ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். அதேபோல் காவேரியாக நடிக்கும் லட்சுமி ப்ரியா, ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். குமரனாக நடிக்கும் கமுருதீன் ஒரு நாளைக்கு ரூ.8000 வாங்கி வருகிறார்.
கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரணி ஹெப்சிபா ஒரு நாளைக்கு ரூ.6 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம். யமுனாவாக நடிக்கும் ஆதிரைக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இரண்டாவது நாயகனாக நிவின் கேரக்டரில் நடிக்கும், ருத்ரன் பிரவீன் ரூ.10 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். வில்லியாக ராகினி கேரக்டரில் நடிக்கும் நடிகை சகஸ்திகா ரூ. 7 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார்.
பசுபதி என்கிற வில்லன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ரமேஷ் ரூ.6 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சோமுவுக்கு ஒரு நாளைக்கு ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்யாணி பாட்டியாக நடிப்பவருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. அஜய் கேரக்டரில் நடித்து வரும் பாஸ்கர் நடராஜன் ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் பெறுகிறார். நடிகை சுஜாதா சிவகுமாருக்கு ரூ.7 ஆயிரமும், சில எபிசோடுகளில் மட்டுமே நடித்த நடிகர் சரவணனுக்கு ரூ. 20 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. இவை அனைத்து ஒரு நாள் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.