சன் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மவுசு உண்டு. அந்த வகையில், வார வாரம் டிஆர்பி ரேஸில் சன் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களான சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல் ஆகிய தொடர்கள் தான் டாப் 3 ஸ்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக டிஆர்பியில் கலக்கி வரும் கயல் சீரியலுக்கு ஆப்பு வைக்க உள்ளதாம் சன் டிவி.
24
கயல் சீரியலுக்கு ஆப்பு
கயல் சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் நாயகனாக சஞ்சீவ்வும், நாயகியாக சைத்ரா ரெட்டியும் நடித்து வருகின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு பிரைம் டைம் சீரியலாக கயல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் விறுவிறுப்பான கதையம்சத்துடன் நகர்ந்து வந்த இந்த சீரியல், போகப் போக போர் அடிக்க தொடங்கியது. இதற்கு காரணம் இதன் சலிப்பூட்டும் கதை தான். ஒரே பாணியில் பிரச்சனையுடனே சீரியல் நகர்ந்து வருவதால் அதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
34
கயல் சீரியல் நேரம் மாற்றம்?
இதனால் கயல் சீரியலை பிரைம் டைமில் இருந்து தூக்க சன் டிவி முடிவு செய்துள்ளதாம். அதன்படி கயல் சீரியலை இரவு 10 மணிக்கு மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக 7.30 மணிக்கு ஆடுகளம் என்கிற புது சீரியல் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ஆடுகளம் சீரியல் தற்போது விறுவிறுப்பான கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாவதால் அதற்கு பெரியளவில் டிஆர்பி ரேட்டிங் கிடைக்கவில்லை. இதனால் ஆடுகளம் சீரியலை டிஆர்பியில் தூக்கி நிறுத்த இரவு 7.30 மணிக்கு மாற்ற உள்ளார்களாம்.
இதுதவிர மூன்று புத்தம்புது சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாம். விரைவில் சன் டிவியின் மதிய நேர சீரியல்களான லெட்சுமி மற்றும் புன்னகை பூவே ஆகியவை முடிக்கப்பட உள்ளதாம். அதற்கு பதிலாக பராசக்தி, தங்க மீன்கள் என இரண்டு சீரியல்கள் வர உள்ளன. இதுதவிர கார்த்திகை தீபம் சீரியல் நாயகி அர்த்திகா நடிக்கும் வினோதினி என்கிற சீரியலும் புதுவரவாக வர உள்ளது. இந்த சீரியல் அநேகமாக மாலையில் தான் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.