ஜீ தமிழில் நடத்தப்பட்டு வரும் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி தான் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ். இந்நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் ஆகியவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படும். இதுவரை சீனியர்களுக்கான 4 சீசன்களும், ஜூனியர்களுக்கான நான்கு சீசன்களும் முடிவடைந்துள்ளது. குறிப்பாக சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் பிரம்மாண்ட இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
24
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவர்களாக பாடகி சைந்தவி, பாடகர் எஸ்.பி.பி சரண், பாடகி ஸ்வேதா மோகன், பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பணியாற்றினர். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான குட்டீஸ் கலந்துகொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் இறுதிப்போட்டிக்கு திவினேஷ், யோக ஸ்ரீ, ஹேமித்ரா, மஹதி, ஸ்ரீமதி, அபினேஷ் ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வாகி இருந்தனர்.
34
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 டைட்டில் வின்னர்
இந்த நிலையில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் ஆர்யா, சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சிவகார்த்திகேயன் தான் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிவித்தார். அதன்படி இந்த சீசனில் கலக்கி வந்த திவினேஷ் தான் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். திவினேஷுக்கு டிராபியுடன் ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது இடம் யோக ஸ்ரீக்கு கிடைத்தது. மூன்றாவது இடத்தை ஹேமித்ரா தட்டிச் சென்றார். சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட திவினேஷுக்கு மெல்லிசை இளவரசர் என்கிற பட்டமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் பழைய பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமானார் திவினேஷ். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்த நிலையில், தற்போது பைனலிலும் வெற்றிபெற்று அசத்தி உள்ளார்.