பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 463ஆவது எபிசோடானது ராஜீயின் டான்ஸ் போட்டியோடு தொடங்குவது முதல்... பல்வேறு திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் ஒளிபரப்பாகி உள்ளது.
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 463ஆவது எபிசோடானது பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜீ டான்ஸ் ஆடிய காட்சிகளுடன் தொடங்கியது. என்னதான் வெளியூரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜீ எதிர்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக டான்ஸ் ஆடி வியக்க வைத்துள்ளார்.
27
Gomathy Angry:
இனிமேல் டான்ஸ் ஆட கூடாது:
இது ஒரு புறம் இருந்தாலும் எல்லோரும் எதிர்ப்பதால் கோபமடைந்த கோமதி, டான்ஸ் ஆடி முடித்ததும் ராஜீயை அங்கிருந்து கூட்டுக் கொண்டு வந்துவிட்டார். மேலும், இனிமேல் நீ டான்ஸ் ஆட வேண்டாம். என்னுடைய கணவரும், உன்னுடைய அப்பாவுக்கும் தெரிந்தால் சண்டை தான் வரும். அதனால், இனிமேல் டான்ஸ் ஆட கூடாது என்று சொல்கிறார்.
பின்னர் அந்த வீட்டில் வேலை பார்க்கும் அந்த ஊரைச் சேர்ந்தவர் அக்கா நீங்க 2ஆவது ரவுண்டுக்கு தேர்வு செய்யப்பட்டீங்க என்று கூறவே அனைவருமே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். ஆனால் கோமதி மட்டும் அப்செட்டாகவே இருந்தார். ராஜீ தனது கணவர் கதிருக்காக 2ஆவது பரிசாக பைக் வாங்க ஆசைப்பட்டுள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும் சக்திவேல் வீட்டிற்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வந்திருக்கிறது.
47
Meena Notice For Sakthivel:
நோட்டீஸ் அனுப்பிய மீனா:
குடோனுக்கு பின் கட்டிடத்தில் ஒரு மாடி கட்ட அனுமதி வாங்கிக் கொண்டு, இன்னும் மாடி கட்டியிருப்பதாகவும், அதனை உடனே இடிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் மீனா. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், பாண்டியனிடம் வம்புக்கு செல்ல முயற்சிக்கிறார். சக்திவேலுவை தடுத்து நிறுத்திய முத்துவேல், வேண்டாம் வேண்டாம், சண்டை போட்டால் ஒன்றும் ஆகாது. குடோனுக்கு பின் உள்ள கட்டிடம் நமக்கு ராசியானது. அதை இடிக்க விட கூடாது என கூறுகிறார்.
முதலில் மீனாவை வேலையை விட்டு தூக்குவதற்கான ஏற்பாடுகளை பண்ண வேண்டும். அப்போது தான் புத்தி வரும் என்றெல்லாம் முத்துவேல் சொல்லிவிடுகிறார். சக்திவேலுவும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய திட்டமிடுகிறார். கடைசியாக அரசி பற்றிய எல்லா உண்மைகளையும் தெரிந்த பிறகு எதுவும் பேசாமல் இருந்த சதீஷ் இப்போது அரசிக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பியிருக்கிறார்.
67
Sathish Voice Note
நீ எல்லா உண்மைகளை சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்:
அதில் கல்யாணத்துக்கு முன் எல்லோருக்கும் காதல் இருக்கும். எனக்கு கூட நான் ஸ்கூல் படிக்கும் போது க்ரஷ் இருந்தது. நீ எல்லா உண்மைகளையும் சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். உனக்கு இது அவசர கல்யாணம். ஆனால், எனக்கு அப்படியில்லை. இப்போது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றால் ஒன்னும் ஒரு வருடமோ, 2 வருடமோ கழித்து கூட திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரையில் நீ நானும் பேசலாம், பழகலாம். அது உனக்கு விருப்பம் இருந்தால் மட்டும் தான். இல்லையென்றால் வேண்டாம். இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று சொல்கிறார்.
77
Pandian Stores Upcoming Episode:
2ஆவது சுற்றில் ராஜீ பங்கேற்பாரா?
இது மீனாவிற்கும், ராஜீக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி நாளை நடைபெறும் டான்ஸ் போட்டியின் 2ஆவது சுற்றில் ராஜீ பங்கேற்பாரா என்கிற எதிர்பார்ப்பும் கூடி உள்ளது. இதே போன்று அரசியும் தனது பங்கிற்கு வாய்ஸ் நோட் மூலமாக கல்யாணத்திற்கு ஓகே சொல்வார் என்று தெரிகிறது.