Pandian Stores 2: காதல் விஷயத்தை கூறிய அரசி; சதீஷ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

Published : Apr 23, 2025, 01:37 PM IST

சதீஷிடம் எல்லா உண்மையையும் அரசி கூறிய நிலையில், அரசு வேலைக்காக ரூ.10 லட்சம் கொடுக்க செந்திலும் தயாராகி உள்ளார். இதுகுறித்த காட்சிகள் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகி உள்ளது.  

PREV
16
Pandian Stores 2: காதல் விஷயத்தை கூறிய அரசி; சதீஷ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 461ஆவது எபிசோடில் செந்திலுக்கு அரசு வேலை தொடர்பாக அவரது மாமனார் அவரை தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது பாண்டியன் போன் போட்டு பேங்கிற்கு சென்று பணத்தை எடுத்து வர சொல்லுகிறார். சரி என்று செந்திலும் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வருகிறார். வெளியில் வந்த அவரிடம் பாண்டியன் போன் போட் டு பணத்தை எடுத்துவிட்டால் போன் போட்டு சொல்லமாட்டீயா, எண்ணி பார்த்து தான வாங்குன என்றெல்லாம் கேட்கிறார். அவரும் நான் கடைக்கு தான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு நேராக தனது மாமனாரிடம் பணத்தை கொடுக்க சென்றுவிடுகிறார்.

26
Senthil Try to Government Job

பணத்தை மாமனாரிடம் கொடுத்தாரா?

மேலும், கண்டிப்பாக அரசு வேலை கிடைத்துவிடும் அல்லவா, பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றமாட்டாங்கல என்றெல்லாம் கேட்கிறார். அதோடு உடனே வேலை கொடுத்துவிடுவார்களா என்றும் கேட்கிறார். அதற்கு மாமனாரோ இந்த கையில் பணத்தை கொடுத்தால், அந்த கையில் அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரை கொடுத்துவிடுவார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றமாட்டார்கள். வெளியூரிலிருந்து இந்த வேலைக்கு வருவதற்கு நிறைய பேர் ரெடியாக இருக்கிறார்கள். உங்களுக்கு தான் யோகம் அடித்திருக்கிறது. உள்ளூரிலேயே அரசு வேலை ரெடியாக இருக்கிறது. பணத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று பேசுகிறார். அதைக் கேட்ட செந்தில் தான் வங்கியிலிருந்து எடுத்து வந்த ரூ.10 லட்சத்தை கொடுக்க தயாராக இருக்கிறார். அதன் பிறகு அவர் அந்த பணத்தை மாமனாரிடம் கொடுத்தாரா இல்லையா என்பது நாளை தெரியவரும்.

Pandian Stores: மீண்டும் சிக்கிய மயிலு... ஆப்பு கன்ஃபாம்; மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராஜு!

36
Sathish Meet Arasi

சதீஷ், அரசியை பார்க்க வருகிறார்:

இதற்கிடையில் கதிரிடம் போன் போட்டு பேசிய மாப்பிள்ளை சதீஷ், நேராக அரசியை பார்க்க வருகிறார். அப்போது அவரிடம் தான் குமாரவேலுவை காதலித்ததாகவும், அவரைத்தான் திருமணம் செய்ய இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் தனது அத்தை பையன் என்பதையும், அதன் பிறகு தனக்கு நடந்த எல்லாவற்றையும் சதீஷிடம் விளக்கமாக எடுத்து கூறியுள்ளார்.

46
Arasi About Love Story

பொய்யாக சிரித்து பேசி என்னால் நடிக்கமுடியவில்லை

மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டு இப்போது உங்களிம் பொய்யாக சிரித்து பேசி என்னால் நடிக்கமுடியவில்லை. அதுதான் எல்லா உண்மையையும் உங்களிடம் நான் சொல்லிவிட்டேன். ஆனால், இப்போது நான் குமாரவேலுவை காதலிக்கவில்லை. அவரது நினைப்பு கூட இல்லை. நான் அவரை உண்மையாக நேசித்தேனா என்பது பற்றியும் எனக்கு தெரியாது. ஒரு பொண்ண நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படும் எல்லா அப்பாக்களையும் போலவும் தான் என்னுடைய அப்பாவும் உங்களுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்தார் என்று எல்லா உண்மைகளையும் சதீஷிடம் சொல்லிவிட்டார்.

Pandian Stores: வெளியூர் ஆட்டக்காரிக்கு மவுஸ் இருக்குமா? டான்ஸ் போட்டியில் கார் ஜெயிப்பாரா ராஜீ?

56
Senthil Government Job

செந்தில் அரசு வேலைக்காக ரூ.10 லட்சம் கட்ட தயாராகிவிட்டார்:

இனி அவர் யாரிடம் சொல்ல போகிறாரோ, என்ன நடக்க போகிறதோ என்ற பதற்றத்துடன் மீனா இருக்கிறார். அரசி தனது கடந்த கால காதல் வாழ்க்கை பற்றி சதீஷிடம் சொல்லிய நிலையில் அரசி மற்றும் சதீஷ் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே செந்தில் அரசு வேலைக்காக ரூ.10 லட்சம் கட்ட தயாராகிவிட்டார். ராஜீயோ போட்டியில் பங்கேற ரெடியாகவும் இருக்கிறார். மீனா தனது நகைகளை அடமானம் வைக்க, அல்லது விற்றாலும் சரி தான் என்று பாண்டியனிடம் கூறியிருக்கிறார்.

66
Sathish and Arasi Marriage

அரசி மற்றும் சதீஷ் திருமணம்:

இப்படி எல்லா சம்பவங்களையும் ஒன்றாக வைத்து பார்க்கும் போது அரசி மற்றும் சதீஷ் திருமணமும் நடக்கும், செந்திலுக்கு அரசு வேலையும் கிடைக்கும், ராஜீ தனது கணவருக்கான பைக் வாங்கி கொடுப்பார் என்றும் தெரிகிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் நடக்குமா? அல்லது ட்விஸ்ட் ஏதாவது இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories