பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 459ஆவது எபிசோடில் கோமதி, அரசி, மீனா மற்றும் ராஜீ ஆகியோர் துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது முதல் துவங்குகிறது.
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய எபிசோடானது கோமதி, அரசி மற்றும் மருகமகளுடன் துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும், கோயிலில் சிறப்பு பூஜையும் செய்ய இருக்கிறார். சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது.
26
Dance Competition:
கோவிலில் நடக்கும் பிரமாண்ட நடன போட்டி:
அதன்படி நடன போட்டி நடத்தப்பட இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக காரும், 2ஆவது பரிசாக பைக்கும், 3ஆவது பரிசாக மோதிரமும் கொடுக்கப்படுகிறது. இந்த போட்டியில் ராஜீ கலந்து கொள்ள இருப்பதாக மீனாவிடம் கூறுகிறார். அதற்கு உள்ளூர் ஆட்டக்காரங்க இருக்கும் போது வெளியூர் ஆட்டக்காரங்களுக்கு மதிப்பு இருக்குமா என்று மீனா கேட்க, இது போட்டி தானே இதில் என்ன உள்ளூர் ஆட்டக்காரங்க, வெளியூர் ஆட்டக்காரங்க என்று ராஜீ பதிலளிக்கிறார். அதற்கு அரசி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணி தான் முதல் பரிசு பெறுவாங்க. அந்த காரிலேயே நாம் ஊருக்கு சென்றுவிடலாம் என்று அரசி ஆதரவாக பேச, ராஜீயோ அத்தையிடம் அனுமதி கேட்க வேண்டும். அதுதான் டாஸ்க் என்று கூறி அவரிடம் அனுமதி வாங்க அவரை ஐஸ் வாங்குகிறாங்க.
46
Gomathi Not Give the Permission:
ராஜீக்கு கிடைத்த ஏமாற்றம்:
இதில் உஷாரான கோமதி, என்ன வேணும் கேள் என்று சொல்ல, டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்க, ஆத்திரமடைந்த கோமதி, வீட்டில் என்ன பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு, டான்ஸ் அது இதுன்னு வந்துட்டு நிக்கிற, அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதில் ராஜீக்கு கொஞ்சம் ஏமாற்றம் மிஞ்சிது. இது ஒரு புறம் இருக்க, பழனிவேல் வீட்டில் ஒட்டடை அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வேலையை முடித்த பிறகு ஃபேனை துடைக்க வேண்டும் என்று சுகன்யா அவரை டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்.
சுகன்யா சண்டை போடாமல் இருக்க சரவணன் போடும் புது பிளான்
பழனிவேல் கடைக்கு போக வேண்டும் என்று கூறவே, கடையில் தான் அத்தனை பேரு இருக்குறார்களே, வீட்டுல நான் மட்டும் தான் தனியாக இருக்கேன். நீங்க வீட்டு வேலையை பாருங்க என கூறுகிறார். அந்த நேரம் பார்த்து சரவணன் வந்து விடுகிறார். பழனிவேலுவிற்கு ஆதரவாக நான் வீட்டில் இருந்தால் உங்களுடன் அத்தை சண்டை போட மாட்டாங்க மாமா என்று ஆறுதலாக கூறுகிறார். கடைசி காட்சியாக கோயிலுக்கு சென்ற இடத்தில் வீட்டில் தனியாக இருக்கும் தங்கமயில் தான் செய்தது தவறு என்று கணவரிடம் மன்னிப்பு கேட்க திரும்ப திரும்ப போன் போடுகிறார்.
66
Raji Participate Dance Programme?
ராஜீ டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது:
ஆனால், சரவணன்னோ போனை எடுப்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் வாட்ஸ் அப்பில் அழுதுகொண்டே மெசேஜ் அனுப்புகிறார். அதைப் பார்த்து சமாதானமான சரவணன் மனைவிக்கு போன் பண்ணுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நாளைய எபிசோடில் கோயிலில் 3 நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என்பதால் ராஜீ அந்த டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் கார் அல்லது பைக் ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காரை அரசிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை சதீஷிற்கு வரதட்சணையாக கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.