Karthigai Deepam: ஹனிமூன் செல்ல ஓகே சொன்ன ரேவதி! கார்த்திக் கொடுத்த ஷாக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Apr 15, 2025, 05:27 PM IST

'கார்த்திகை தீபம்' சீரியல் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், நேற்றைய தினம் சாமுண்டீஸ்வரியின் தோழி கார்த்தி மற்றும் ரேவதியை பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்த நிலையில்... இன்று என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.  

PREV
14
Karthigai Deepam: ஹனிமூன் செல்ல ஓகே சொன்ன ரேவதி! கார்த்திக் கொடுத்த ஷாக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

சாமுண்டீஸ்வரி தோழியின் வருகை:
 

சாமுண்டீஸ்வரியின் அமெரிக்க தோழி, சொன்னபடியே வீட்டிற்கு வரும் நிலையில்.. சந்திரகலா எப்படியும் இங்கு வரும் அந்தப் பெண் ஆங்கிலத்தில் தான் பேசப் போகிறார். இந்த டிரைவர் எதுவும் புரியாமல் அவரிடம் திருதிருவென  முழிக்க போகிறான் என்று சந்தோஷத்தில் மிதக்க, அமெரிக்காவில் இருந்து வரும் சாமுண்டீஸ்வரியின் தோழி, சந்திரகலா நினைத்தது போலவே கார்த்தியிடம் ஆங்கிலத்தில் பேச கார்த்தியும் பதிலுக்கு சரளமாக இங்கிலீஷில் பேசி அசத்துகிறார். 

24
Karthik Talking English Fluently

மனைவியை அறிமுகம் செய்து வைத்த கார்த்திக் 
 

 இதை சற்றும் எதிர்பாராத  சந்திரகலா அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தன்னுடைய மனைவி ரேவதியை அந்த பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான். மேலும் கார்த்திக்கை பார்த்து சந்திரகலா மற்றும் குடும்பத்தினர் ஒரு டிரைவராக இருந்துகிட்டு எப்படி இவ்வளவு நல்லா எப்படி இங்கிலீஷ் பேசுறீங்க? என கேள்வி கேட்க மயில்வாகனம் இங்க வேலை செய்ய வரதுக்கு முன்னாடி, ராஜா ஒரு வெள்ளைக்காரன் வீட்டில் வேலை செஞ்சதா என்கிட்ட சொல்லி  இருக்கான். அதனால தான் இவ்வளவு நல்ல இங்கிலீஷ் பேசுகிறான் என சொல்லி சமாளிக்கிறார்.

Karthigai Deepam: ரேவதி - கார்த்திக்கிற்கு பாட்டி ஏற்பாடு செய்த தடபுடல் விருந்து! சாமுண்டீஸ்வரியின் ட்விஸ்ட்?

34
Revathy and Karthik Got Honey Moon Ticket:

அமெரிக்க பெண் கொடுத்த பரிசு:

சாமுண்டீஸ்வரியின் தோழி மணமகன் மற்றும் மணமகளுக்கு தன்னுடைய கிஃப்ட்டாக ஹனிமூன் டிக்கெட்டை வழங்குவதோடு, அவர்கள் தங்குவதற்கு ஹோட்டல் மற்றும் செல்வதற்கான பிளைட் டிக்கெட் என அனைத்தையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். பின்னர்  கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் சென்று இதெல்லாம் சரிப்பட்டு வராது அத்தை என்று மறுத்து பேச, நீங்க ரேவதியை நினைத்து தானே இப்படி சொல்றீங்க. அவளிடம் நான் பேசுறேன் என கூறுகிறாள். சாமுண்டீஸ்வரி ரேவதி அறைக்கு சென்று ஹனிமூன் பத்தி பேச்சை எடுக்க ரேவதி எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் ஓகே என  கூறுவது, சாமுண்டீஸ்வரிக்கு மட்டும் அல்ல ராஜ ராஜனுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

44
Maya Phone Call:

ரேவதியை பார்க்க அழைக்கும் மாயா:

பின்னர் கார்த்திக் ரேவதியிடம் பேசும்போது, உங்க அம்மாவுடைய டார்ச்சரில் இருந்து தப்பிப்பதற்கு  தானே ஹனிமூன் வருவதா சொன்னீங்க என்று கேட்க, இதெல்லாம் சரியா தான் கண்டுபிடிக்கிறீங்க என சலித்துக் கொண்டே ரேவதி கூறுகிறாள். பின்னர் இது குறித்து மாயாவுக்கு போன் செய்து சந்திரகலா கூறும் நிலையில், மாயா ரேவதிக்கு போன் செய்து உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும் என கூறுகிறாள். மகேஷ் மற்றும் மாயாவின் சுயரூபம் பற்றி தெரியாத ரேவதி சரி கண்டிப்பாக பேசலாம் என கூறும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி சொன்ன வார்த்தை! பதறும் அபிராமி? வசமாக சிக்கப்போகும் கார்த்திக்!

Read more Photos on
click me!

Recommended Stories